அவிபலி- வே. பார்த்திபன்; பக். 192; ரூ.235; கிழக்கு பதிப்பகம், சென்னை- 600 014, ✆ 044- 4200 9603.
சங்க காலம் தொட்டே நிலம் சார்ந்து இயற்கை, முன்னோர், குலதெய்வங்களை தமிழர்கள் வழிபட்டு வந்துள்ளனர். அவர்களின் சடங்குகளும் அதையொட்டியே இருந்துள்ளன. அவை வெறும் சம்பிரதாயங்கள் மட்டுமல்லாமல், மக்களின் கலாசாரத்தைக் காக்கும் சமூக கட்டமைப்பாகவும் திகழ்ந்து வருகின்றன.
ஹிந்து சமயத்தில் யாகங்களின் போது யாக குண்டத்தில் வளர்க்கப்படும் அக்னியில் தெய்வங்களுக்கு நெய், தானியம் போன்றவை இடப்படும். அந்த அவிர்பாகத்தை ஹவிஸ் என்பார்கள். அதுதான் தமிழில் அவிபலி.
நிறைமாத கர்ப்பிணியான மனைவி ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், அவரை அருகிலிருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்திருப்பதாகவும், இரு உயிர்களில் ஒருவர் பிழைப்பதே அரிதென மருத்துவர்கள் கூறியதாகவும் மாமியார் வீட்டிலிருந்து கணவருக்குச் செய்தி வருகிறது.
அவசர அவசரமாக விடுப்பு எடுத்துவிட்டு அலுவலகத்தில் இருந்து ஊருக்கு வரும் கணவர், எல்லையில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலுக்குச் செல்கிறார். அங்கிருந்த பூசாரி அவரை ஆசுவாசப்படுத்தி விசாரிக்க, நிலைமையைக் கண்ணீருடன் கூறுகிறார். அப்போது பூசாரி மீது திரௌபதி அம்மன் இறங்கி அருள்வாக்குக் கூறுகிறாள்.
கதையில் வரலாறு, தொல்லியல், நாட்டார் தெய்வ வழிபாடு, நடுகல் மரபு, நடுநாட்டு சோழ, பாண்டிய நாட்டு நிலவியல், செப்பேடு உள்ளிட்ட பல செய்திகள் பின்னிப்பிணைந்துள்ளன.
கதையில் கள ஆய்வுக்கும், கல்வெட்டுத் தகவலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணமங்கலம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றதாகக் கூறப்படும் வரலாற்று நிகழ்வுகள், அமானுஷ்ய சம்பவங்கள் வாசிப்பைச் சுவாரஸ்யப்படுத்துகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










