தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

பிரபாகரன்- எழுச்சியும் வீழ்ச்சியும்

விடுதலைப் புலிகள் இயக்கம் குறித்தும், தன்னை வெல்ல எவருமே இல்லை என்று கடைசி வரை நம்பியிருந்த அதன் தலைவர் பிரபாகரன் குறித்தும் நடுநிலையுடன் இந்த நூல் அலசுகிறது.

News image
Updated On :22 ஜூன் 2026, 7:55 pm IST

பிரபாகரன்- எழுச்சியும் வீழ்ச்சியும்- எம்.ஆர். நாராயண் ஸ்வாமி; தமிழில்: சிவா பரமேஸ்வரன்; பக். 324; ரூ. 450; சுவாசம் பதிப்பகம், சென்னை- 600 127, ✆ 81480 66645.

விடுதலைப் புலிகள் இயக்கம் குறித்தும், தன்னை வெல்ல எவருமே இல்லை என்று கடைசி வரை நம்பியிருந்த அதன் தலைவர் பிரபாகரன் குறித்தும் நடுநிலையுடன் இந்த நூல் அலசுகிறது.

இலங்கை, இந்தியாவுக்கு ராணுவ ரீதியாக மட்டுமல்லாது அரசியல் ரீதியாகவும் பெரும் சவாலாக விளங்கிய விடுதலைப் புலிகள் இயக்கத்தின் எதிர்பாராத வீழ்ச்சி, பிரபாகரன் மற்றும் அவரது இயக்கத்தின் தவறுகளைத் துல்லியமாக கால வரிசைப்படுத்தியுள்ளார் நூலாசிரியர்.

சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையை கலங்கடித்து, ஆட்டிப்படைத்து, வதைத்த ஓர் இயக்கத்தின் தொடக்க காலம் தொட்டு இறுதிக் காலம் வரையில் தன்னிச்சையாக எடுக்கப்பட்ட சரியான-தவறான முடிவுகள்; ராணுவ, அரசியல் ரீதியாக நடத்தப்பட்ட கொலைகள்; ஆன்டன் பாலசிங்கத்துக்கும் பிரபாகரனுக்கும் இடையேயான நட்பு; தமிழ்ப் போராளிகளுக்கு இந்தியா ஆயுதப் பயிற்சி அளித்தது; இந்திய-இலங்கை ஒப்பந்தம்; இந்திய அமைதிப் படையினர் இலங்கைக்குச் சென்றது; விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இந்திய அமைதிப்படைக்கும் இடையே நிகழ்ந்த மோதல்; ராஜீவ் காந்தி படுகொலை; அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு உலக அளவில் பயங்கரவாதம் குறித்த கருத்தாக்கத்தில் ஏற்பட்ட மாற்றங்களை சரிவரப் புரிந்துகொள்ளாமை; இலங்கைப் பிரச்னைக்கு தனித் தமிழ் ஈழமே தீர்வு என்பதில் பிடிவாதமாய் இருந்தது உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளையும் அலசி ஆராய்கிறது இந்நூல்.

வரலாற்றில் இருந்து எப்போதும் வேண்டுமானாலும் காலதாமதமின்றி பாடம் கற்கலாம். அந்தப் பாடத்தை இலங்கை - இந்திய அரசுகள், விடுதலைப் புலிகள் இயக்கம் என முத்தரப்பினருமே கற்காததன் விளைவாக கணக்கிலடங்கா மனித உயிர்கள் பலியானதுதான் மிச்சம் என்று இந்த நூலில் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.