பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

தீர்வுகள் இங்கே!!! (பாகம்1)

'இறைவன் உதவி' என்ற பகுதியில் நேர்மையானவர்களுக்கும், உண்மையானவர்களுக்கும் ஏற்படும் துன்பத்திலிருந்து இறைவன் எந்த வகையில் உதவுகிறார் என்பதை நூலாசிரியர் முன்வைத்துள்ளார்.

Published On :

தீர்வுகள் இங்கே!!! (பாகம்1)-ஞானகுரு கிருஷ்ணதாசன்; பக். 210; ஸ்ரீ கிருஷ்ண ஜோதி அறக்கட்டளை, 75501 50723. ✆ 94444 55705.

பிரச்னைகளுக்கு தீர்வு எங்கிருக்கிறது என ஒவ்வொரு பகுதியாக தனக்கே உரிய பாணியில் கதைகள், அனுபவங்கள், நிகழ்வுகளுடன் 'ஆன்மீக குரு', 'இறைவன் உதவி', 'நான் கடவுளைக் கண்டால்' என்பன உள்ளிட்ட 29 பகுதிகளாக நூலாசிரியர் தெரிவித்துள்ளார்.

'குருவின் முக்கியத்துவம்' என்ற பகுதியில் உலகின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் கிருஷ்ணரின் கீதையும், வள்ளுவரின் திருக்குறளும் இணைந்து சிறப்பான தீர்வைக் கொடுக்கும் என்று தெரிவித்திருப்பது முற்றிலும் உண்மை. 'இறைவன் உதவி' என்ற பகுதியில் நேர்மையானவர்களுக்கும், உண்மையானவர்களுக்கும் ஏற்படும் துன்பத்திலிருந்து இறைவன் எந்த வகையில் உதவுகிறார் என்பதை நூலாசிரியர் முன்வைத்துள்ளார்.

பிரச்னைக்கு தீர்வு நம்மிடமே உள்ளதைத் தெரிவிக்கும் விதமாக உங்களுக்கு 'பயப்படுங்கள்' என்ற பகுதியில் பெற்றோர், பெரியோர், ஆசிரியர், மேலதிகாரிகளிடம் பணிவு காட்டுங்கள், மரியாதை கொடுங்கள். ஆனால், பயப்படாதீர்கள்; பயம் வேறு, மரியாதை வேறு என்பதைத் தெளிவுபடுத்திக் கொண்டால் பயமறியா நிலையுடன் பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும். இறுதியாக மனதில் ஆழப்பதிந்த எண்ணங்களே புறச்சூழலை நிர்ணயிக்கின்றன என்பது மிக அருமை.

இந்தப் புத்தகத்தின் முதல் பக்கத்தை திறந்தவுடன் நம்மை ஈர்த்த ஒரு விஷயம் என்னவென்றால், இப்பதிப்பு விற்பனைக்கல்ல, இலவசமும் அல்ல எனத் தெளிவுபடுத்தி, நீங்களும் படித்து, மற்றவர்களும் படிக்க உதவலாமே! படித்தபிறகு இந்தப் புத்தகத்துக்கான விலையை நீங்களே நிர்ணயித்து, அதை தொண்டு நிறுவனங்களுக்கோ, கோயில்களுக்கோ, ஏழைகளுக்கோ கொடுங்கள்! அது.. எங்களை வந்து சேரும் என்று தெரிவித்திருப்பது சிறப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.