தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 96.26 ஆக நிறைவு!சரிவிலிருந்து மீண்டெழுந்த பங்குச் சந்தை: சென்செக்ஸ் 473 புள்ளிகளுடனும், நிஃப்டி 134 புள்ளிகளுடன் நிறைவு!!உத்தரப் பிரதேச மாநிலங்களவைத் தேர்தல்: வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக!

ஈரம் மிக்க ஆசிரியர்களே!

சமுதாய சிந்தனை, கல்வி சார்ந்த பணிகளில் இருப்பவர்கள், மாணவர்கள், பெற்றோர் என பல்வேறு தரப்பினரும் படிக்க வேண்டிய படைப்பு இது.

Published On :

ஈரம் மிக்க ஆசிரியர்களே!-சுவாமி விமூர்த்தானந்தர்; பக். 192; ரூ. 200; வானதி பதிப்பகம், சென்னை -600 017. ✆ 044-2434 2810.

ஒரு சமுதாயத்தை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள். அதனால்தான் ஆசிரியர்களை சமுதாயம் என்ற தேர்ச் சக்கரத்தின் அச்சாணிகள் என்கிறோம். எல்லா பிரச்னைகளுக்கும் கல்வியே தீர்வு என்று கூறிய சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளை நடைமுறைப்படுத்தும் நல் முயற்சியாக உருவாகியுள்ளது இந்தப் படைப்பு.

மாணவர்கள் என்ற பெரும் கூட்டத்தினருடன் பெரும்பான்மையான வாழ்வியல் நேரத்தை செலவிடும் ஆசிரியப் பெருமக்கள் படும் சங்கடங்கள் உள்ளிட்டவற்றை அறிந்து அவற்றுக்கான தீர்வுகளும், பதில்களும் தரப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். மாணவர்களுடன் அன்பான உறவு, வகுப்பறையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய பல விவரங்கள் கூறப்பட்டுள்ளன.

ஆசிரியர் உடல்நலனை சீராக பார்த்துக்கொண்டால்தான், மாணவர்கள் ஆசிரியர்களின் முகம்பார்த்து கவனத்துடன் செவிமடுப்பார்கள் என்ற கருத்தைச் சொல்லும் 'மாணவர்களுக்காக ஈரம்' என்ற தலைப்பு உள்பட 13 கட்டுரைகள், தன்னம்பிக்கையும், சிந்தனையையும், பகுத்தறிவையும் போதிக்கும் அருமையான 9 சிறுகதைகள், சீரழிந்துவரும் நமது சமுதாயத்தைக் காக்கும் பொறுப்பு யாரிடம் அதிகம் உள்ளது?, ஆசிரியர் பணியைத் தேர்ந்தெடுப்பவர் அறிய வேண்டியவை என்ன? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு சுவாமி விமூர்த்தானந்தர் அளித்த பதில்கள் 9 தொகுப்புகளாக இடம்பெற்றிருப்பது, ஆசிரியர் மேம்பாட்டுக்கான 3 அத்தியாயங்கள் என முற்றிலும் கல்வி சார்ந்த தகவல்கள், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பயனுள்ளவை.

சமுதாய சிந்தனை, கல்வி சார்ந்த பணிகளில் இருப்பவர்கள், மாணவர்கள், பெற்றோர் என பல்வேறு தரப்பினரும் படிக்க வேண்டிய படைப்பு இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.