தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

தொல்லியல் ஆய்வும்

கைப்பேசியிலும், இணையதளத்திலும் சங்க கால வரலாறு குறித்த பல்வேறு தரவுகளைத் தேடிக்கொண்டிருக்கும் இன்றைய இளம்தலைமுறையினருக்கான தொல்லியல் குறித்து அறியப்படாத தகவல்களை உள்ளடக்கியதுதான் இந்த நூல்.

Published On :

தொல்லியல் ஆய்வும்-அகழாய்வும் -முனைவர் சீ. வசந்தி, த. ஐஸ்வர்யபிரதினா, கே. சுரேஷ்பாலாஜி; பக். 110, ரூ. 110; கங்காராணி பதிப்பகம், சென்னை-600 074. ✆ 98840 57267.

கைப்பேசியிலும், இணையதளத்திலும் சங்க கால வரலாறு குறித்த பல்வேறு தரவுகளைத் தேடிக்கொண்டிருக்கும் இன்றைய இளம்தலைமுறையினருக்கான தொல்லியல் குறித்து அறியப்படாத தகவல்களை உள்ளடக்கியதுதான் இந்த நூல்.

தொல்லியல் என்ற தனித் துறை எப்போது உருவானது?, அதற்காக பங்காற்றியவர்கள் யார்?, அவர்களில் முக்கியப் பங்காற்றியவர்களில் மைக்கேல் மெர்காட்டி, ஹென்ரிச் சிலீமென், ஆர்தர் ஈவான்ஸ், பால் எமிலி போட்டா, இ.ஹெச். தாம்சன் உள்ளிட்டோர் குறித்த விவரங்கள் தேடினாலும் கிடைக்காத பொக்கிஷம். அதைவிட முக்கியமானதாக, 'தொல்லியலின் தந்தை' என்றழைக்கப்படும் 1801-1809 வரை அமெரிக்க அதிபராக பணியாற்றிய தாமஸ் ஜெபர்சன் குறித்த வரலாறு மிகச் சிறப்பு.

'வரலாறும் அறிவியலும் பிரிவுகளும்' என்ற பகுதியில் பழைய கற்காலம், இடைக் கற்காலங்களில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களான கைக்கோடரிகள், வெட்டுக்கத்திகள், வட்டுக்கருவிகள், கரண்டிகள், கிழிப்பான்கள், கல்சுத்திகள், சில்லுக்கருவிகள் என அறியப்படாத கருவிகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகழாய்வின் வகைகள், அகழாய்வுக்கு எவ்வாறு இடத்தைத் தேர்வு செய்வது?, யாரிடம் அனுமதி பெறுவது?, ஆய்வின் போது, கிடைக்கும் பழங்காலப் பொருள்களை பாதுகாப்பது, கையாள்வது, பாதுகாப்பதற்கான உபகரணங்கள், ரசாயனங்கள் குறித்து விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆய்வில் கிடைத்த பொருள்கள் எந்தக் காலத்தில் பயன்படுத்தப்பட்டவை என்பதைக் கண்டறியும் முறைகள், கிடைத்த பொருள்களை எப்படி காட்சிப்படுத்துவது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நூலில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் பழங்கால காட்சிகளை நம் கண்முன்னே நிறுத்துகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.