காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

பிள்ளையார்பட்டி தல வரலாறு

திருமூலர், கபிலதேவர், அதிராவடிகள், நம்பி ஆண்டார் நம்பி, பெருந்தேவனார், ஒளவையார், உமாபதி சிவம், வில்லிபுத்தூரார், கோவிலூர் ஆண்டவர் அருளிய பிள்ளையார் தோத்திரப் பாடல்கள் இந்நூலில் கடைசியில் இடம் பெற்றுள்ளன.

Published On :10 ஆகஸ்ட் 2026, 6:51 pm IST

பிள்ளையார்பட்டி தல வரலாறு - கம்பன் அடிப்பொடி சா. கணேசன்; பக். 104; ரூ. 100; முல்லைப் பதிப்பகம், சென்னை -600 048. ✆ 98403 58301.

குடைவரைக் கோயிலான பிள்ளையார்பட்டி, ஒன்பது நகரக் கோயில்களுள் ஒன்று. இதன் தல வரலாற்றுப் புத்தகம் 1959-ஆம் ஆண்டு முதன்முதலில் வெளியானது. பல ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாம் பதிப்பு வெளிவந்துள்ளது. இதில் முன்பதிப்பில் கண்ட சில கருத்துகள், வரலாற்று ஆராய்ச்சி முடிவுகளால் திருத்தம் பெற்றுள்ளன.

முதன்முதலாக நடைபெற்ற திருப்பணி, இன்று காணப்பெறும் கோயிலின் தென்புறத்தில் கிழக்கு மேற்காக நீண்டுக் கிடக்கும் குன்றில் வடமுகமாக மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட குடைவரைக் கோயில் என்றும், இங்குள்ள மூர்த்திதான் பிள்ளையார்பட்டி பெருந்தெய்வமான கற்பக விநாயகர் என்று அழைக்கப்படும் தேசிக விநாயகப் பிள்ளையார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த குடைவரைக் கோயிலுக்கு மேற்கே அதே மலையில் நின்ற நிலையில் சங்கரநாராயணர் அருள்பாலிப்பதையும், அதன் மேற்புற பத்தியின் நடுவே தூங்கானை மாட அமைப்பில் குடையப்பட்டுள்ள கருவறையின் நடுவே குடைந்தமைந்த லிங்கமாக எழுந்தருளி இருப்பவர் திருவீசர் என்று வழங்கும் திருவீங்கைக்குடி மகாதேவர் என்றும் விளக்கமாகச் சொல்லப்பட்டுள்ளது.

பிள்ளையார்பட்டி குடைவரைக் கோயிலில் உள்ள பதினொரு கல்வெட்டுகள், அதில் உள்ள விவரங்கள், பிள்ளையார்பட்டியின் வேறு பெயர்கள், அங்குள்ள பிள்ளையாரின் பல்வேறு திருநாமங்கள், பிற தெய்வங்கள், தினசரி வழிபாட்டு நேரம், இதுவரை நடைபெற்ற கும்பாபிஷேக தேதி விவரங்கள் சிறப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

திருமூலர், கபிலதேவர், அதிராவடிகள், நம்பி ஆண்டார் நம்பி, பெருந்தேவனார், ஒளவையார், உமாபதி சிவம், வில்லிபுத்தூரார், கோவிலூர் ஆண்டவர் அருளிய பிள்ளையார் தோத்திரப் பாடல்கள் இந்நூலில் கடைசியில் இடம் பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.