தமிழ்த் திரையில் நாவல்கள்- பகீம்; பக். 104; ரூ. 100; சாய்சூர்யா எண்டர்பிரைசஸ், சென்னை-600 017. ✆ 044-2433 1510.
தினமணி கதிர், கல்கி, ஆனந்த விகடன் உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் தொடராகவும், தனியாகவும் வெளிவந்த 50 நாவல்கள் தமிழ்த் திரைப்படங்களாக மாறிய பின்னணியையும், அவற்றின் சுவாரஸ்ய தகவல்கள், படங்களின் சுருக்கத்தையும் அலசும் நூல் இது. 1940-ஆம் ஆண்டு முதல் தற்போது வரையிலான அந்தப் படங்கள் ரசிகர்களால் இன்றும் நினைவுகூரப்படும் அளவுக்கு பரிச்சயமானவையாகும்.
பொன்னியின் செல்வன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன், பார்த்திபன் கனவு, பொன்னர் சங்கர், அரவான், மகாதேவி, மலைக்கள்ளன், மணிமேகலை, பூம்புகார், சரஸ்வதி சபதம் உள்ளிட்ட சரித்திர திரைப்படங்களும், விசாரணை, குற்றம் 23, யட்சன், என்னதான் முடிவு ,
காயத்ரி, கள்வனின் காதலி, சைத்தான் உள்ளிட்ட குற்றம் தொடர்பான திரைப்படங்களும், கரையெல்லாம் செண்பகப்பூ, ஒன்பது ரூபாய் நோட்டு, அம்மாவின் கைப்பேசி, உன்னைப் போல் ஒருவன், சுமைதாங்கி, புவனா ஒரு கேள்விக்குறி, சொல்ல மறந்த கதை, ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், ஒருத்தி, 47 நாட்கள், பத்ரகாளி, முள்ளும் மலரும், அவன் அவள் அது, சொல்லத்தான் நினைக்கிறேன், பாவை விளக்கு உள்ளிட்ட கிராமப்புற- குடும்பப் படங்களும் இடம்பெற்றுள்ளன.
நண்பன், சூரரைப் போற்று உள்ளிட்ட இளைய தலைமுறையினருக்கான உத்வேகப் படங்களும், ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஆனந்த தாண்டவம், தில்லானா மோகனாம்பாள் உள்ளிட்ட காதல் படங்களும், பரதேசி, அசுரன், சில நேரங்களில் சில மனிதர்கள் உள்ளிட்ட சமூகப் பிரச்னைகளை அலசும் படங்களும் திரைப்படங்களாகியுள்ளன.
கருணாநிதி, எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜோசப் விஜய் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தொடர்புடைய திரைப்படங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. எந்தக் காலத்திலும் மறக்கக் கூடாத 50 திரைப்படங்களை எதிர்வரும் தலைமுறையினருக்குச் சுட்டிக் காட்டுகிறது இந்த நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வில்லியம் ஷேக்ஸ்பியர் ஆண்டனியும் கிளியோபாட்ராவும்

மஆலிமுஸ் ஸுன்னத்தின் நபவிய்யா-பாகம் 2

வரப்பெற்றோம் (03-08-2026)

வரப்பெற்றோம் (27-07-2026)
விடியோக்கள்

விஜய் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ? | CM Vijay | TVK Ministers | Jagadeswaran | TVK Government



