/

இன்று உணவுப் பொருள் குறைதீர்க்கும் கூட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட உணவுப் பொருள் வழங்கல் தொடர்பான குறைதீர்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூலை 12) நடைபெறுகிறது.

Updated On :12 ஜூலை 2013, 1:56 am IST

பெரம்பலூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட உணவுப் பொருள் வழங்கல் தொடர்பான குறைதீர்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூலை 12) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் வி. மீனாட்சிசுந்தரம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: பெரம்பலூர் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பான பொதுமக்களின் குறைகேட்கும் கூட்டம் நடைபெறுகிறது.  பெரம்பலூர் வட்டம் அம்மாபாளையத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையிலும், வேப்பந்தட்டை வட்டம் தொண்டமாந்துறையில் டிஎன்சிஎஸ்சி துணை மண்டல மேலாளர் தலைமையிலும், குன்னம் வட்டம் சித்தளியில் பொது விநியோகத்திட்ட துணைப் பதிவாளர் தலைமையிலும், ஆலத்தூர் வட்டம் செட்டிக்குளத்தில் நில அளவை உதவி இயக்குநர் தலைமையிலும் காலை 10 மணியளவில் நடைபெறுகிறது. பொதுமக்கள் பங்கேற்று குறைகளை தெரிவிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.