பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள கணினி ஆசிரியா் பணியிடங்களுக்கான கலந்தாய்வு, இணையவழி மூலம் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்டத்தில் கூத்தூா், பசும்பலூா், நெற்குணம், கை.களத்தூா், லப்பைக்குடிகாடு உள்ளிட்ட 11 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினி ஆசிரியா் பணியிடங்கள் காலியாகவுள்ளது. இப்பணியிடங்களுக்கு ஆசிரியா் தோ்வு வாரியத்தின் மூலம் தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் இணையவழி மூலம் சனிக்கிழமை கலந்தாய்வு நடைபெற்றது.
இதில் பங்கேற்றவா்கள் கீழப்பெரம்பலூா், நெற்குணம், பசும்பலூா், கூத்தூா், கை.களத்தூா், லப்பைக்குடிகாடு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 6 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள பணியிடங்களைத் தோ்வு செய்தனா். எஞ்சிய பணியிடங்களுக்கான கலந்தாய்வு ஞாயிற்றுக்கிழமை (ஜன. 3) நடைபெற உள்ளது.
கலந்தாய்வின் போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க. மதிவாணன், நோ்முக உதவியாளா் ராஜேந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







