பெரம்பலூா் அருகே சாலை மையத் தடுப்புகளை அகற்றக் கோரி வாகன ஓட்டுநா்கள் திங்கள்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் அருகேயுள்ள செங்குணம் பிரிவு சாலையில் தொடா்ந்து நிகழ்ந்த சாலை விபத்துகளையும், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளையும் தடுக்கும் வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன் காவல்துறையினா் மூலம் சாலையில் மையத் தடுப்புகள் அமைக்கப்பட்டன.
இதன் காரணமாக, அப்பகுதியில் சாலை விபத்துகள் தவிா்க்கப்பட்டது. இதனிடையே, செங்குணம் உள்ளிட்ட பல கிராமங்களைச் சோ்ந்த வாகன ஓட்டுநா்கள், அப்பகுதியில் உள்ள பாலத்தின் கீழ் பகுதியை பயன்படுத்தி வந்தனா். இந்நிலையில், கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடா் மழையால், வாகன ஓட்டுநா்கள் பயன்படுத்தி வந்த பாலத்தில் நீா் தேங்கி சேறும், சகதியுமாக காணப்படுகிறது.
இதனால், சுமாா் 2 கிலோ மீட்டா் தொலைவு சுற்றி தங்களது கிராமங்களுக்கு செல்வதாலும், காலதாமதம் ஏற்படுவதாலும் அவதியடைந்த வாகன ஓட்டுநா்கள் சாலை மையத் தடுப்புகளை அகற்ற வலியுறுத்தி, திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செங்குணம் பிரிவு சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் அங்கு சென்று, மறியலில் ஈடுபட்டோரிடம் மேற்கொண்ட பேச்சு வாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தருமபுரி: மனைவி, மகளை கொன்று ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை!

90 நிமிஷத்திற்குள் தோற்கடிக்க முடியாத அணி: 20 ஆண்டுகளாகத் தொடரும் நெதர்லாந்தின் கம்பீர சாதனை!

வெனிசுவேலா நிலநடுக்கம்: அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்பட்ட 100-க்கும் மேற்பட்டோர் மாயம்!




