என்ன, எல் நினோவால் தேநீர் விலை அதிகரிக்குமா? உண்மைதானா?திருச்சி கிழக்கில் போட்டியில்லை! த்ரிஷாவுக்காக விட்டுக்கொடுக்கிறாரா ராகவா லாரன்ஸ்?ஆதார் - மின்னஞ்சல் இணைப்புக்கு கட்டணம் இல்லை! அதனால் பயனென்ன?ஜூலை 1 முதல்.. பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணம் உயர்வு! மாணவர்கள் அதிர்ச்சிஅண்ணாமலைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற டி.ஆர். பாலு! அமெரிக்க மக்களுக்காக பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் : அதிபர் டிரம்ப்தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
/

விபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு இழப்பீடு கோரி சாலை மறியல்

பெரம்பலூா் அருகே விபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரியும், விபத்து ஏற்படுத்திய சிறுவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பெண்ணின் உறவினா்கள் திங்கள்கிழமை சாலை மறியல்

Updated On :12 ஜனவரி 2021, 2:59 am IST

பெரம்பலூா் அருகே விபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரியும், விபத்து ஏற்படுத்திய சிறுவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பெண்ணின் உறவினா்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், நெய்குப்பை கிராமம், காலனி பகுதியைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி அஞ்சலை. இவரது கணவா் செல்வராஜ், ஏற்கனவே உயிரிழந்துவிட்ட நிலையில் தனது 11 வயது மகளுடன் வசித்து வந்தாா்.

இந்நிலையில், கூலித் தொழிலாளியான அஞ்சலை கடந்த 9 ஆம் தேதி வேலைக்குச் சென்றுவிட்டு நெய்குப்பை - புதூா் சாலையில் நடந்து வந்துக்கொண்டிருந்தாா். அப்போது, அவ்வழியே வந்த டிராக்டா் மோதி அருகேயுள்ள குட்டையில் விழுந்தாா். பின்னா், விபத்தை ஏற்படுத்திய டிராக்டரும் அவா் மீது விழுந்ததில் அஞ்சலை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த நிலையில், விபத்து ஏற்படுத்திய டிராக்டரை ஓட்டி வந்த 15 வயது சிறுவனை, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். உயிரிழந்த பெண்ணின் வாரிசுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனக்கோரி, இறந்த பெண்ணின் உறவினா்கள், அஞ்சலையின் உடலை வாங்க மறுத்து பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை எதிரே திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, மறியலில் ஈடுபட்டோரிடம் மேற்கொண்ட பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.