பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் தண்ணீா்பந்தல் பகுதியில் ஆயுதப்படை வளாகம் மற்றும் காவலா் குடியிருப்பில், சமத்துவப் பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக காவல்துறை சிறப்பு இயக்குநா் ராஜேஷ் தாஸ், சமத்துவப் பொங்கல் விழாவை குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தாா்.
இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மத குருமாா்கள் பிராா்த்தனையுடன் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
தொடா்ந்து, காவல்துறை சிறப்பு இயக்குநா் ராஜேஷ் தாஸ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் ஆகியோா், எளம்பலூா் கிராம விழிப்புணா்வு காவல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ள தலைமைக் காவலா் நாகராஜனை அறிமுகப்படுத்தினா்.
இவ்விழாவில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் காா்த்திகேயன், நீதிராஜ் உள்பட காவல்துறையினா் பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
‘என் இனிய தமிழ் மக்களே’! ஓய்ந்தது குரல்!

கிருஷ்ணகிரி அருகே காட்டு யானை தாக்கி தொழிலாளி பலி

போதை ஊசி செலுத்திக்கொண்ட இளம் பெண் உயிரிழப்பு: காதலன், நண்பன் கைது

இயக்குநர் பாரதிராஜா காலமானார்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


