நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயற்சி: பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் கைது

புதுச்சேரியில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றதாக பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் 120 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.

Updated On :2 மே 2013, 12:09 pm IST

புதுச்சேரியில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றதாக பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் 120 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி அரசின் பொதுப்பணித்துறை, கல்வித்துறை, பாப்ஸ்கோ, பாசிக் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தினக்கூலி ஊழியர்களாக பணியாற்றி வந்த 4 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இவர்கள், தங்களுக்கு மீண்டும் வேலை வழங்கக் கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இவர்கள் பங்கேற்ற மே தின ஆலோசனைக் கூட்டம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

அங்கு எடுக்கப்பட்ட முடிவின்படி, துணைநிலை ஆளுநர் அலுவலகத்தை அவர்கள் முற்றுகையிடச் சென்றனர்.

மேலும் கைகளில் கறுப்புக் கொடி ஏந்தியபடி ஊர்வலமாக சென்ற அவர்களை, நேருவீதி - மிஷன் வீதி சந்திப்பு அருகே பெரியகடை போலீஸார் கைது செய்தனர்.

கைதான 120 பேரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.