ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மே தினக் கொண்டாட்டம்

புதுச்சேரியில் பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் மே தினக் கொண்டாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :2 மே 2013, 6:41 am

புதுச்சேரியில் பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் மே தினக் கொண்டாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பெரியமார்க்கெட் கிளை சார்பில் பாரதி வீதி பூக்கடை அருகே கொடியேற்று விழா நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் வி.சிவகுருநாதன், நகரக்குழு உறுப்பினர் எம்.சுப்பிரமணி, கமிட்டி உறுப்பினர் கே.வைத்தியலிங்கம் ஆகியோர் தலைமை வகித்தனர்.

மாநிலச் செயலர் ஆர்.விஸ்வநாதன், தேசியக்குழு உறுப்பினர் நாரா.கலைநாதன், பொருளாளர் அ.மு.சலீம் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.  நிகழ்ச்சியில் புதிய உறுப்பினர்களுக்கு அட்டைகள் வழங்கப்பட்டன.

ஐ.என்.சி.யு.டி: ஐ.என்.சி.யு.டி. சார்பில் வில்லியனூர் இன்டேன் கேஸ் நிரப்புமிடத்தில் தேசிய கேஸ் லாரி ஓட்டுநர் சங்கத் திறப்பு விழா நடைபெற்றது.

இதனை மாநிலத் தலைவர் ஜி.ரவிச்சந்திரன் திறந்து வைத்தார்.

இதேபோல், வெங்கடசுப்பாரெட்டியார் சதுக்கம் அருகே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மினி லாரி சங்கப் பலகை திறந்து வைக்கப்பட்டது. இந்திராகாந்தி சதுக்கத்தின் ஆட்டோ சங்கத்தின் கொடியேற்றப்பட்டது.

காலாப்பட்டு பிம்ஸ் மருத்துவமனை மற்றும் சாஷன் மருந்துத் தொழிற்சாலைகளில் ஐ.என்.டி.யு.சி. சங்கக் கொடியேற்றப்பட்டது. நிர்வாகிகள் எஸ்.குமார், ஜி.நரசிங்கம், சொக்கலிங்கம், துரைராஜ், ஞானசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொ.மு.ச: தொ.மு.ச. சார்பில் உப்பளம் தமிழ்நாடு போக்குவரத்துக்கழக பணிமனை, பாரதி மில், சுதேசி மில், சாலைப் போக்குவரத்துக்கழகம், பஸ் நிலைய திமுக ஆட்டோ சங்கம் உள்ளிட்ட இடங்களில் சங்கத்தின் கொடியேற்றப்பட்டது.

மாநில திமுக அமைப்பாளர் எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியன், நிர்வாகிகள் அண்ணா அடைக்கலம், ஃபிராங்ளின் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

அண்ணா தொழிற்சங்கம்:  அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பில் புதுச்சேரி அரசு போக்குவரத்துக்கழகம், திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட பகுதிகளில் சங்கக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது.

பேரவைச் செயலர் ஏ.பாப்புசாமி, நிர்வாகிகள் புருஷோத்தமன், ஆ.பாஸ்கர் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

இதே போல், மார்க்சிஸ்ட் கட்சி, சி.ஐ.டி.யு., புதுச்சேரி படைப்பாளி மக்கள் கட்சி ஆகியவற்றின் சார்பிலும் சங்கங்களின் கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.