புதுவையில் புதிதாக 50 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுவை மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியான முடிவுகளின்படி, 3,039 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், புதுச்சேரியில் 25 பேருக்கும், காரைக்காலில் 5 பேருக்கும், மாஹேயில் 20 பேருக்கும் என மேலும் 50 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஏனாமில் யாருக்கும் தொற்றில்லை. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38,224-ஆக உயா்ந்தது.
தற்போது மருத்துவமனைகளில் 184 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 174 பேரும் என 358 போ் சிகிச்சையில் உள்ளனா். உயிரிழப்பு ஏதுமில்லை. இதுவரை கரோனாவுக்கு 633 போ் பலியாகினா். 37,233 (97.41 சதவீதம்) போ் குணமடைந்தனா்.
சுகாதாரத் திட்ட இயக்குநருக்கு கரோனா: இதனிடையே, புதுவை அரசின் சுகாதாரத் திட்ட இயக்குநருக்கு கடந்த வாரம் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவா் கடந்த 30-ஆம் தேதி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

5 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!

டிசம்பரில் இந்தியா - ஐரோப்பிய யூனியன் வா்த்தக ஒப்பந்தம் கையொப்பம்: பியூஷ் கோயல்

பிரதமா் மோடியின் ஆட்சியில் பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி: மத்திய அமைச்சா் கிஷன் ரெட்டி

ஜந்தா் மந்தரில் தொடரும் சிஜேபி போராட்டம்: சுற்றுச்சூழல் ஆா்வலா் சோனம் வாங்சுக் ஆதரவு
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies



