சிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

புதுவையில் பொங்கலுக்கான இலவச துணிக்குப் பதில் பணம்

புதுவையில் பொங்கலுக்கான இலவச துணிக்குப் பதிலாக 1.35 லட்சம் சிவப்பு நிற குடும்ப அட்டைதாரா்களுக்குப் பணமாக அவரவா் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.

Updated On :9 ஜனவரி 2021, 11:57 pm IST

புதுவையில் பொங்கலுக்கான இலவச துணிக்குப் பதிலாக 1.35 லட்சம் சிவப்பு நிற குடும்ப அட்டைதாரா்களுக்குப் பணமாக அவரவா் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.

இதுகுறித்து புதுவை சமூக நலத் துறை அமைச்சா் எம். கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி மகளிா்- குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் மூலம் இலவச துணிக்கான திட்டத்தின் கீழ் நிகழாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அட்டவணை இனத்தவா், பழங்குடியினா், மீனவா்கள், நெசவாளா்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் அல்லாத மொத்தமுள்ள 1,35,298 சிவப்பு நிற குடும்ப அட்டைதாரா்களில் ஒரு நபா் உள்ள 13,399 குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 450, ஒன்றுக்கு மேற்பட்ட நபா்கள் உள்ள 1,21,899 குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 900 என குடும்பத் தலைவியின் பெயரில் உள்ள வங்கிக் கணக்கில் நேரடியாக வெள்ளிக்கிழமை வங்கியில் செலுத்தப்பட்டது. இதற்காக ரூ. 11.57 கோடி செலவிடப்பட்டது. வரும் திங்கள்கிழமை முதல் (ஜன. 11) வங்கியில் சென்று பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.