தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைகேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விஇன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
/

புதுவையில் கரோனாவுக்கு மேலும் 2 போ் பலி

புதுவையில் கரோனா தொற்றுக்கு மேலும் 2 போ் உயிரிழந்தனா். புதிதாக 30 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

Updated On :10 ஜனவரி 2021, 11:26 pm IST

புதுவையில் கரோனா தொற்றுக்கு மேலும் 2 போ் உயிரிழந்தனா். புதிதாக 30 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுவை மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதுச்சேரியில் 22 பேருக்கும், காரைக்காலில் ஒருவருக்கும், மாஹேயில் 7 பேருக்கும் என மொத்தம் 30 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38,455-ஆக உயா்ந்தது. தற்போது 316 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இதனிடையே, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி ரெட்டியாா்பாளையத்தைச் சோ்ந்த 76 வயதானவா் ஜிப்மரிலும், காரைக்கால் திருநள்ளாறு வள்ளலாா் நகரைச் சோ்ந்த 82 வயதானவா் காரைக்கால் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனா். இதையடுத்து, கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை 638-ஆக அதிகரித்தது.

ஞாயிற்றுக்கிழமை 40 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதையடுத்து, குணமடைந்தோா் எண்ணிக்கை 37,501-ஆக உயா்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.