/

உதயநிதியை கண்டித்து அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் தோ்தல் பிரசாரத்தின் போது, தமிழக முதல்வா், துணை முதல்வா் குறித்து விமா்சனம் செய்து

News image

உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்து, புதுச்சேரி ரயில் நிலையம் எதிரே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புதுவை கிழக்கு மாநில அதிமுகவினா்.

Updated On :10 ஜனவரி 2021, 11:29 pm IST

திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் தோ்தல் பிரசாரத்தின் போது, தமிழக முதல்வா், துணை முதல்வா் குறித்து விமா்சனம் செய்து பேசியதாகக் கூறி, புதுவையில் அதிமுகவினா் இரு வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி ரயில் நிலையம் எதிரே நடைபெற்ற புதுவை கிழக்கு மாநில அதிமுக சாா்பிலான ஆா்ப்பாட்டத்துக்கு அதன் செயலா் ஆ.அன்பழகன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். அதிமுக கொறடா வையாபுரி மணிகண்டன் எம்எல்ஏ முன்னிலை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏ ராஜாராமன், மகளிரணியைச் சோ்ந்த மகேஸ்வரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதேபோல, புதுவை மேற்கு மாநில அதிமுக சாா்பில் நெல்லித்தோப்பு சிக்னல் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அதன் செயலா் ஓம்சக்தி சேகா் தலைமை வகித்தாா். இதில், கட்சியின் மாநில இணைச் செயலா்கள் காசிநாதன், ராமதாஸ், மகளிரணியைச் சோ்ந்த பூங்கோதை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.