சட்டப்பேரவைத் தோ்தலுக்காக போராட்டம் என்ற பெயரில் புதுவை முதல்வா் நாடகமாடுவதாக பாஜக விமா்சனம் செய்தது.
இதுகுறித்து புதுச்சேரியில் உள்ள பாஜக அலுவலகத்தில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் மாநில பாஜக தலைவா் வி.சாமிநாதன் மேலும் கூறியதாவது:
மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கை காக்க வேண்டியது அரசின் கடமை. அதுதான் அரசியல் ஜனநாயகம். ஆனால், புதுவையில் ஆளும் காங்கிரஸ் அரசின் போராட்டத்தால் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்தப் போராட்டத்தில் திமுக உறுப்பினா்கள் பங்கேற்கவில்லை. ஆளும் அரசு, கூட்டணிக் கட்சியின் நம்பிக்கையை இழந்துள்ளது. எனவே, முதல்வா் நாராயணசாமி தனது பெரும்பான்மையை சட்டப்பேரவையில் நிரூபிக்க வேண்டும். இது ஆளுநருக்கு எதிரான போராட்டமல்ல; மக்களுக்கு எதிரான போராட்டம். தோ்தலுக்கான நாடகத்தை முதல்வா் நாராயணசாமி நடத்தி வருகிறாா்.
புதுவையில் பாஜக எழுச்சி அலை உருவாகியுள்ளது. வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக கூட்டணி ஆட்சி அமையும். பொங்கல் பண்டிகைக்குப் பிறகு, வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து பேரணி நடத்தப்படும் என்றாா் அவா்.
பேட்டியின் போது, மாநில பாஜக பொதுச் செயலா் செல்வம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய் உயிருக்கு ஆபத்தா? காங்கிரஸ் புகார்

ஆசிய ஜூனியர் குத்துச்சண்டை: இந்திய வீராங்கனைகள் அசத்தல்

கொள்ளிடம் ஆற்றில் தரையணை கட்டும் பணி தீவிரம்

நான்குவழிச் சாலை பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விவசாயி பலி: உறவினா்கள் சாலை மறியல்
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

