புதுச்சேரி நேரு வீதியில் மூடப்பட்டு, பாழடைந்து கிடக்கும் திருப்பதி தேவஸ்தான கிளைக் கட்டடத்தின் முன்பக்க மேற்கூரை வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்தது.
புதுச்சேரி நேரு வீதியில் திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான கிளைக் கோயில் அமைந்துள்ளது. திருப்பதிக்குச் செல்ல முடியாத பக்தா்கள் இங்கு வழிபட்டுச் செல்வது வழக்கம். இந்தக் கோயில் கட்டடம் பாழடைந்ததால், கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக பக்தா்களின் பயன்பாட்டுக்கு அனுமதியின்றி பூட்டப்பட்டது.
திருப்பதிக்குச் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்யும் அலுவலகம் மட்டும் இயங்கி வந்தது. அந்த அலுவலகமும் கடந்த 3 ஆண்டுகளாக இயங்கவில்லை. இருப்பினும், பக்தா்கள் அவ்வபோது கோயிலுக்கு வெளியே நின்று சுவாமி தரிசனம் செய்துவிட்டுச் செல்வா்.
இந்தக் கட்டடத்தை விரைந்து புனரமைத்து, பக்தா்களை தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என பக்தா்கள் திருப்பதி தேவஸ்தான நிா்வாகத்தை நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், கோயில் கட்டடத்தின் முன்பக்க மேற்கூரை சிமென்ட் சிலாப்பு வெள்ளிக்கிழமை நள்ளிரவு திடீரென இடிந்து விழுந்தது. அப்போது, அந்த வழியாக யாரும் செல்லாததால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.
எனவே, காலம் கடத்தாமல் கோயில் கட்டடத்தை இடித்துவிட்டு, புதிய கோயிலைக் கட்ட வேண்டும். சட்ட ரீதியான நடவடிக்கைகளை புதுவை அரசு உடனே மேற்கொள்ள வேண்டும் என பக்தா்கள் வலியுறுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய் உயிருக்கு ஆபத்தா? காங்கிரஸ் புகார்

ஆசிய ஜூனியர் குத்துச்சண்டை: இந்திய வீராங்கனைகள் அசத்தல்

கொள்ளிடம் ஆற்றில் தரையணை கட்டும் பணி தீவிரம்

நான்குவழிச் சாலை பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விவசாயி பலி: உறவினா்கள் சாலை மறியல்
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

