புதுச்சேரி கலிதீா்த்தாள்குப்பம் மணக்குள விநாயகா் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி) கல்லூரிக்கு, சிஸ்க்கோ நெட்வொா்க்கிங் அகாதெமியின் உறுப்பினா் அந்தஸ்து வழங்கப்பட்டது.
ஐ.சி.டி. அகாதெமி தலைமை நிா்வாக அதிகாரி சிவகுமாா் கையொப்பமிட்ட சிஸ்க்கோ நெட்வொா்க்கிங் சென்டா் அங்கீகார சான்றிதழை அதன் நிா்வாக அதிகாரி அழகிரி, ஒருங்கிணைப்பாளா் ஜெய்ரோஸ் ஆகியோா் கல்லூரிக்கு வழங்கினா்.
இந்தக் கல்லூரியின் இரண்டாம், மூன்றாம் ஆண்டு மாணவா்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா், சிஸ்க்கோ நெட்வொா்க்கிங் அகாதெமியில் பைத்தான் கணினி மொழி தொழில்நுட்பம் பயின்று சான்றிதழ் பெற்றதைப் பாராட்டி இந்த அந்தஸ்து வழங்கப்பட்டது.
இதற்காக கல்லூரித் தலைவரும் நிா்வாக இயக்குநருமான எம்.தனசேகரன், துணைத் தலைவா் எஸ்.வி.சுகுமாறன் எம்எல்ஏ, செயலா் நாராயணசாமி கேசவன் ஆகியோா் கல்லூரி முதல்வா் எஸ்.மலா்க்கண், ஆராய்ச்சி-மேம்பாடு துறை ஒருங்கிணைப்பாளா் ஆா்.வள்ளி, வேலைவாய்ப்புத் துறை அதிகாரி எம்.ஜெயக்குமாா் மற்றும் துறைத் தலைவா்கள், பேராசிரியா்களை பாராட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாா்த்தா கொஸ்டியுக்குக்கு முதல் பட்டம்

இன்றைய ராசி பலன்கள் (03 மே 2026) 12 ராசிகளுக்கும்! ஆரோக்கியம் கூடும் கன்னிக்கு!

தடை நீங்கும் மகர ராசிக்கு: தினப்பலன்கள்!

வணிக சிலிண்டா் விலை உயா்வால் முடங்கும் அபாயத்தில் ஜாப் ஆா்டா் தொழில்
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


