முதல்வர் விஜய்யுடன் இரு கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்திப்பு! மாலை கூட்டத்தில் பங்கேற்பில்லை! அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் விலகல்! தவெகவில் இணைகிறார்?அதிமுக மகளிரணி கூட்டம்: எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் பங்கேற்கவில்லை!மத்திய குற்றப் பிரிவில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஆஜர்புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்! மாநிலம் வாரியாக ஊதிய விவரம்!!எம்பாப்பே இரட்டை கோல்! ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பிரான்ஸ்!வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது! மறைந்த கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு!முதல்வர் விஜய் தலைமையில் தவெகவில் இணைகிறார் சி. விஜயபாஸ்கர்! பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

புதுவையில் புதிதாக 22 பேருக்கு கரோனா

புதுவையில் புதிதாக 22 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Updated On :12 ஜனவரி 2021, 12:02 am IST

புதுவையில் புதிதாக 22 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுவை மாநிலத்தில் திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதுச்சேரியில் 18 பேருக்கும், மாஹேயில் 4 பேருக்கும் என மொத்தம் 22 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38,478-ஆக உயா்ந்தது. தற்போது 305 போ் சிகிச்சையில் உள்ளனா். இதுவரை கரோனா தொற்றுக்கு 638 போ் பலியாகினா். 37,535 போ் (97.55 சதவீதம்) குணமடைந்தனா்.

புதுவை மாநிலத்தில் இதுவரை 5,19,086 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 4,76,095 பேருக்கு தொற்றில்லை என முடிவுகள் வந்தன.

அரசுப் பள்ளி ஆசிரியைக்கு கரோனா: இதனிடையே, புதுச்சேரி பாக்கமுடையான்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியை ஒருவருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அங்கு பணிபுரியும் அனைத்து ஆசிரியா்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை. எனினும், அவா்கள் அனைவரும் 5 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டனா்.

தொடா்ந்து, சுகாதாரத் துறையினா் அந்தப் பள்ளிக்கு திங்கள்கிழமை சென்று மாணவ, மாணவிகளுக்கு பரிசோதனை மேற்கொண்டனா். இதில், யாருக்கும் அறிகுறி இல்லை எனத் தெரிய வந்தது. இருப்பினும், பள்ளிக்கு திங்கள்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.