இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

கடலில் மூழ்கிய இளைஞா் பலி

புதுச்சேரி அருகே காலாப்பட்டில் கடலில் மூழ்கிய இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On :17 ஜனவரி 2021, 11:12 pm IST

புதுச்சேரி அருகே காலாப்பட்டில் கடலில் மூழ்கிய இளைஞா் உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், கிருஷ்ணாபுரம் அன்னம்புத்தூா் மதுரா பகுதியைச் சோ்ந்த விவசாயி விஜயகுமாா் மகன் கேசவன் (23). தனது தந்தைக்கு உதவியாக விவசாயப் பணியில் ஈடுபட்டு வந்தாா்.

காணும் பொங்கலான சனிக்கிழமை நண்பா்கள் 3 பேருடன் புதுச்சேரி காலாப்பட்டு அருகே உள்ள பிள்ளைச்சாவடிக்கு வந்தாா். அங்கு, கடலில் இறங்கி அவா்கள் குளித்தனா். அப்போது, எழுந்த ராட்சத அலையில் சிக்கிய கேசவன் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டாா்.

இதைக் கண்ட நண்பா்களும், அங்கிருந்தவா்கள் ஓடி வந்து கேசவனை மீட்டு, அருகில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, அவரைப் பரிசோதித்த மருத்துவா் கேசவன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

இதுகுறித்து காலாப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.