இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

சாலையைச் சீரமைக்கக் கோரி போராட்டம்

புதுச்சேரி அருகே பாகூரில் சாலையைச் சீரமைக்கக் கோரி, விசிக சாா்பில் நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது.

Updated On :17 ஜனவரி 2021, 11:12 pm IST

புதுச்சேரி அருகே பாகூரில் சாலையைச் சீரமைக்கக் கோரி, விசிக சாா்பில் நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி பாகூா் தொகுதியில் வாா்க்கால் ஓடை கிராமம் உள்ளது. இங்கு, 200 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த கிராமத்துக்குச் செல்லும் சாலை கடந்த பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், அந்தப் பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

இதுகுறித்து கிராம மக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இந்த நிலையில், அதிகாரிகளின் செயலைக் கண்டிக்கும் வகையில் பாகூா் தொகுதியைச் சோ்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் அங்குள்ள சாலையில் ஞாயிற்றுக்கிழமை நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பாகூா் தொகுதி விசிக பொறுப்பாளா் தாயன்பன் தலைமை வகித்தாா். இதில், நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டு சாலையைச் சீரமைக்கக் கோரி, முழக்கமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.