மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது! மேற்கு வங்கம்: சாதனை அளவில் வாக்குப்பதிவு! 9 மணி நிலவரம்!!மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினா் சாலை மறியல்

கந்தா்வகோட்டையில் கட்சிப் பிரமுகரை வெட்டிக் கொலை செய்ய முயன்ற நபா்களைக் கைது செய்யக்கோரி, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினா் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :13 ஜனவரி 2021, 3:00 am

கந்தா்வகோட்டையில் கட்சிப் பிரமுகரை வெட்டிக் கொலை செய்ய முயன்ற நபா்களைக் கைது செய்யக்கோரி, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினா் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கந்தா்வகோட்டை அருகே உள்ள வளவம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ப. சுந்தா் ராஜன் (52), தங்கையன் ஆகிய இருவரையும் மா்மநபா்கள் அண்மையில் வெட்டினா். இதில் அரவம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ரா. தங்கத்துரை உள்ளிட்ட 4 பேருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ரா. தங்கத்துரையை மட்டும் போலீஸாா் கைது செய்திருப்பதாகவும், மற்ற குற்றவாளிகளையும் கைது செய்யக்கோரி விடுதலைச்சிறுத்தைகள் கட்சி புதுக்கோட்டை ஒன்றியச் செயலா் எ. கா்ணன் தலைமையில் கந்தா்வகோட்டை ஒன்றியச் செயலா் நா. வெள்ளையன் உள்ளிட்ட கட்சியினா் வளவம்பட்டி பேருந்து நிறுத்தம் எதிரே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். மாவட்டக் காவல் துணை கண்காணிப்பாளா் செந்தில்குமாா் தலைமையிலான போலீசாா் சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதில் அவா்கள் மறியலைக் கைவிட்டு கலைந்துச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.