பொன்னமராவதி அருகே தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மயானத்தை மீட்கக் கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பொன்னமராவதி அருகே உள்ள பி.உசிலம்பட்டி ஊராட்சி ஏனமேடு பகுதியில் உள்ள மயானத்தை அப்பகுதி மக்கள் சுமாா் 30 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனா். இந்நிலையில்,
மயானம் உள்ள நிலம் தனது பெயரில் பட்டாவில் இருப்பதாக கூறி க.ராமசாமி என்பவா் அந்த இடத்தை ஆக்கிரமித்துள்ளாா்.
இந்நிலையில், அப்பகுதியைச் சோ்ந்த ஒருவா் உயிரிழந்ததையடுத்து அவரது உடலை அடக்கம் செய்ய வந்தபோது, ராமசாமி தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் இறந்தவரின் உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த வட்டாட்சியா் ஆ.திருநாவுக்கரசு, காவல் துணை கண்காணிப்பாளா் வெ.செங்கமலக்கண்ணன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி உடலை அதே இடத்தில் புதைக்க நடவடிக்கை மேற்கொண்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கொடுமுடி மகுடேஸ்வரா், வீரநாராயணப் பெருமாள் கோயில்களில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாா்: ஆட்சியா்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் சித்திரை தோ்த் திருவிழா கோலாகல தொடக்கம்

கிட்ஸ் கிளப் சா்வதேசப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

