இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

ராமநாதபுரத்தில் பெண் ஊராட்சித் தலைவர்கள் மாநாடு

ராமநாதபுரத்தில் பெண் ஊராட்சித் தலைவர்களுக்கான மாநாடு புதன்கிழமை, தமிழ்நாடு ஊராட்சி பெண் தலைவர்கள்

Updated On :22 ஆகஸ்ட் 2013, 11:40 am IST

ராமநாதபுரத்தில் பெண் ஊராட்சித் தலைவர்களுக்கான மாநாடு புதன்கிழமை, தமிழ்நாடு ஊராட்சி பெண் தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர் கிருஷ்ணவேணி தலைமையில் நடைபெற்றது.

     மாநாட்டினை மனித உரிமை மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு, தமிழ்நாடு கிராம புனரமைப்பு இயக்கம், பெண்களுக்கான சட்ட சேவை மையம் உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள் இணைந்து நடத்தின. சினேகா தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் ஜேசு ரெத்தினம், சிர்டு தொண்டு நிறுவன இயக்குநர் எம். ஜீவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மனித உரிமை மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் என். சித்ரா வரவேற்றுப் பேசினார்.

     மாநாட்டில் ஊரக வளர்ச்சித்துறையில் கூடுதல் இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்ற கே. சுப்பிரமணியம்,  லா அறக்கட்டளையின் இயக்குநர் ஏ. காந்திமதி,  பெண்களுக்கான சட்ட சேவை மைய ஒருங்கிணைப்பாளர் பி. சாமிக்கண்ணு, டி.ஆர்.ஆர்.எம். இயக்குநர் எஸ். கருப்புச்சாமி ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினார்கள். மாநாட்டின் இறுதியில் பெண் ஊராட்சித் தலைவர்கள் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு புதிய நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர்.

        உள்ளாட்சிகளுக்கான 29 துறைகளுக்கான அதிகாரங்களை உடனடியாக வழங்கிட வேண்டும். சட்டத்தின்படி மாவட்ட ஆட்சியரின் வரைமுறையற்ற அதிகாரங்களை நீக்க வேண்டும். ஊராட்சிகள் சுயமாக செயல்படும் வகையில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட வேண்டும். கிராம சபையின் அதிகாரங்களை பலப்படுத்திட வேண்டும். கிராம சபைகள் நாடாளுமன்றம் போல செயல்பட அரசு அனுமதியளிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் பங்கேற்ற ஊராட்சி பெண் தலைவர்களுக்கு, ஊராட்சி அரசாங்கம், தலைவர்கள் சந்தித்த சவால்களின் கதைகள், உள்ளாட்சி, அரசாங்கப் பிரதிநிதிகளின் குரல் உள்ளிட்ட நூல்கள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.