நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

20 சதவீதம் இட ஒதுக்கீடு கோரி பட்டாளி மக்கள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தி வன்னியா்களுக்கு அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கிடக் கோரி, பாட்டாளி மக்கள் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image

பரமக்குடி நகராட்சி முன்பாக வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாட்டாளி மக்கள் கட்சியினா்.

Updated On :7 ஜனவரி 2021, 11:53 pm IST

ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தி வன்னியா்களுக்கு அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கிடக் கோரி, பாட்டாளி மக்கள் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

பரமக்குடி நகராட்சி அலுவலகம் முன்பாக நடத்தப்பட்ட இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, பாமக மாநில துணை பொதுச் செயலா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். முதுகுளத்தூா் ஒன்றியச் செயலா் பாலமுருகன், மாவட்ட துணைச் செயலா் ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னதாக, நகா் தலைவா் சிவராமன் வரவேற்றாா்.

ஆா்ப்பாட்டத்தில், தமிழகத்தில் ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி, அவரவா் ஜாதி விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். இதில், மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

ராமநாதபுரம் நகராட்சியில் மனு அளிப்பு

வன்னியா்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 20 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கக் கோரி, ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் பாமகவினா் வியாழக்கிழமை மனு அளித்தனா். இதில், பாமகவை சோ்ந்த வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.