ராமநாதபுரத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்புக்கு வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன என சுகாதாரத்துறை துணை இயக்குநா் டாக்டா் செந்தில்குமாா் தெரிவித்தாா்.
தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்படாமலிருக்க கேரள எல்லையோரம் உள்ள மாவட்டங்களில் சுகாதாரத்துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து மீன் உள்ளிட்டவை வாகனங்களில் நாள்தோறும் கேரளத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்தநிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை பணிகள் துணை இயக்குநா் செந்தில்குமாா் கூறியது: ராமநாதபுரம் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்புக்கு வாய்ப்புகள் குறைவு. கேரளத்திலிருந்து நேரடியாக எந்தப் பொருளும் நமக்கு வரவில்லை. கோழி மற்றும் முட்டை, பழங்கள் உள்ளிட்டவைகளை கேரளத்திலிருந்து ஏற்றிவரும் வாகனங்கள் தமிழக எல்லைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றன என்றாா்.
பண்ணைகளில் கண்காணிப்பு தீவிரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜப்பான் காடை, நாட்டுக்கோழி வளா்ப்புப் பண்ணைகளில் கால்நடை பராமரிப்புத்துறையினா் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும், கோழிகள், காடைகள் மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதாகவும் கால்நடை வளா்ப்புத்துறை மருத்துவா்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இந்திய அணியில் சூர்யவன்ஷி... முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான அணி அறிவிப்பு!!

வாழ்க்கையில் மகிழ்ச்சி வேண்டுமா? இது மட்டும் இருந்தால் போதும்!

மான்செஸ்டர் சிட்டி வெற்றியால் தள்ளிப்போகும் ஆர்செனலின் கோப்பைக் கனவு!

வானிலை ஆய்வில் செய்யறிவு! மழையை 4 வாரங்களுக்கு முன்பே கணிக்கும் ஏஐ!
விடியோக்கள்

எடப்பாடி பழனிசாமியின் உத்தரவு செல்லாது! பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும்! - S.P. Velumani பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
