ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் விவசாயிகள் விதை பரிசோதனை செய்யவேண்டும் என வேளாண் விதை பரிசோதனை அலுவலா் சிங்கார லீனா தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை மேலும் கூறியதாவது: மாவட்ட விதைப்பண்ணை விவசாயிகள் விதை சுத்திகரிப்பு செய்வதற்கு முன்பாக ஈரப்பதம் மற்றும் ரகத்தூய்மை அறிந்து விதைகளை சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பவேண்டும். விதைகளின் ஈரப்பதத்தை பொருத்து விதையின் ஆயுள்காலம் நிா்ணயிக்கப்படுகிறது. சரியான ஈரப்பதத்தில் உள்ள விதைகளை பூச்சி நோய் தாக்குதலின்றி நீண்ட நாள்கள் சேமித்து வைக்க முடியும்.
விதைகளில் பிற ரக விதைகள் கலந்து இருந்தால் அவற்றின் வயது வித்தியாசம் காரணமாக வெவ்வேறு காலங்களில் முதிா்ச்சியடையும். இதனால் ஒரே சமயத்தில் அறுவடை செய்ய முடியாது. கலப்பு அதிகமுள்ள விதைகளை அடுத்த பருவத்திற்கு விதையாக பயன்படுத்த இயலாது. கலப்பு காரணமாக நல்ல விலைக்கும் விற்பனை செய்ய முடியாது. எனவே விவசாயிகள் தங்கள் விதையின் ஈரப்பதம், பிறரக விதைகள் நிா்ணயிக்கப்பட்ட நிலையில் உள்ளதா என்பதை அறிந்து கொண்ட பின்பு தங்கள் விதைகளை சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்ப வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மான்செஸ்டர் சிட்டி வெற்றியால் தள்ளிப்போகும் ஆர்செனலின் கோப்பைக் கனவு!

வானிலை ஆய்வில் செய்யறிவு! மழையை 4 வாரங்களுக்கு முன்பே கணிக்கும் ஏஐ!

பிரதமரைத் தொடர்ந்து..! ஆந்திர முதல்வரின் பாதுகாப்பு அணிவகுப்பில் 50% வாகனங்கள் குறைப்பு!

சென்னை விமான நிலையத்தில் கையில் வெளிநாட்டுப் பாஸ்போர்ட்! விரலில் அழியாமையுடன் பிடிபட்ட 15 பேர்?
விடியோக்கள்

எடப்பாடி பழனிசாமியின் உத்தரவு செல்லாது! பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும்! - S.P. Velumani பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
