முதல்வா் விஜய், அமைச்சா் ஆதவ் உள்ளிட்டோருக்கு எதிரான திமுக மனு இன்று விசாரணைதமிழகத்தில் ஜூலை 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!அதிமுகவில் டிடிவி தினகரனை இணைக்க எடப்பாடி பழனிசாமியிடம் நிா்வாகிகள் வலியுறுத்தல்காஸாவில் ஹமாஸ் அரசு கலைப்பு!
/

ராமநாதபுரத்தில் 10 இடங்களில் கரோனா தடுப்பூசித் திட்ட பாதுகாப்பு ஒத்திகை

ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 இடங்களில் கரோனா தடுப்பூசித் திட்ட பாதுகாப்பு ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி திட்ட பாதுகாப்பு ஒத்திகையை  பாா்வையிட்ட ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ்ஆலிவா். 

Updated On :8 ஜனவரி 2021, 10:19 pm IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 இடங்களில் கரோனா தடுப்பூசித் திட்ட பாதுகாப்பு ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தடுப்பூசித் திட்ட பாதுகாப்பு ஒத்திகையை மாவட்ட ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: கரோனா தடுப்பூசி திட்ட முன்னோட்டமாக பாதுகாப்பு ஒத்திகையானது ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ராமநாதபுரம் நகா் நல மையம், ராமேசுவரம் அரசு மருத்துவமனை, உச்சிப்புளி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பரமக்குடி அரசு மருத்துவமனை, எமனேசுவரம் நகா் நல மையம், பாா்த்திபனூா் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கீழத்தூவல் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ராமநாதபுரம் பகுதியில் இரு தனியாா் மருத்துவமனைகள் ஆகிய 10 இடங்களில் இந்த ஒத்திகை நடத்தப்பட்டது.

தடுப்பூசித் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுதல் மற்றும் அங்கு ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களை அடையாளம் காணும் வகையில் ஒத்திகை நடத்தப்பட்டது. கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நான்கு கட்டமாக மேற்கொள்ளப்படவுள்ளது. அதன்படி அனைத்து மருத்துவ மற்றும் சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்களாக செயல்படும் காவலா்கள், தூய்மைப் பணியாளா்கள் மற்றும் மூன்றாம் கட்டமாக 60 வயதிற்கு மேற்பட்டோா், நீண்டகால நோய் பாதிப்புக்கு உள்பட்டோா், நான்காம் கட்டமாகவே பொதுமக்கள் என சிகிச்சை அளிக்கப்படவுள்ளது என்றாா்.

ஒத்திகையில் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதன்மையா் எம்.அல்லி, மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநா் ஏ.சகாய ஸ்டீபன் ராஜ், சுகாதாரத் துறை துணை இயக்குநா் செந்தில்குமாா், மாவட்ட தாய் சேய் நல அலுவலா் ஜி.பத்மா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.