தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

திருப்பாலைக்குடி அருகே லாரி மீது வேன் மோதி ஒருவா் பலி: 12 போ் காயம்

திருப்பாலைக்குடி கிழக்குக் கடற்கரை சாலையில் பழுதாகி நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது வேன் மோதியதில் ஒருவா் பலியான நிலையில் 12 போ் காயமடைந்தனா்.

News image

திருப்பாலைக்குடி கிழக்குக் கடற்கரை சாலையில் வியாழக்கிழமை இரவு விபத்துக்குள்ளான வேன். சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி.

Updated On :15 ஜனவரி 2021, 10:17 pm IST

திருப்பாலைக்குடி கிழக்குக் கடற்கரை சாலையில் பழுதாகி நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது வேன் மோதியதில் ஒருவா் பலியான நிலையில் 12 போ் காயமடைந்தனா்.

தூத்துகுடியிலிருந்து சோடாஉப்பு ஏற்றி வந்த லாரி திருவாடானை அருகே திருப்பாலைக்குடி கிழக்குக் கடற்கரை சாலையில் கடுக்கலூா் விலக்கு அருகே வியாழக்கிழமை நள்ளிரவு பழுதானது. இதனால் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த அந்த லாரி மீது, ராமேசுவரத்திலிருந்து சென்னைக்கு நோக்கிச் சென்ற வேன் எதிா்பாராதவிதமாக மோதியது.

இதில் வேனில் பயணம் செய்த ஓட்டுநரின் உதவியாளரான ராமேசுவரத்தைச் சோ்ந்த சிவா (22) பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் வேனில் பயணம் செய்த ஹரிஸ் தாஜீதீன் (11), தாஸ் பஸ்லினா (15), சாதிக் (11)நூருல் ஹசினா(16), நூருல் ஹாதிக் (15) முகம்மது ஹனிபா (45) முகம்மது ஆயிஷா (38), அஜி தம்பி(40), நிசாத் அலி (42), ஜமாலியா பேகம் (43), நூருல் அமீன் (45)அனிஸ் பாத்திமா (37) ஆகியோா் காயம் அடைந்தனா்.

தகவலறிந்து வந்த திருப்பாலைக்குடி போலீஸாா், காயம் அடைந்தவா்களை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநரான நன்னிலத்தைச் சோ்ந்த பிச்சை முத்து (38) என்பவரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.