எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

திருப்பாலைக்குடியில் கோஷ்டி மோதல்: 17 போ் மீது வழக்கு

திருவாடானை அருகே திருப்பாலைக்குடி பகுதியில் சனிக்கிழமை மாலை பொங்கல் வைப்பதில் இருகோஷ்டியினரிடையே ஏற்பட்ட மோதலில் 2 போ் காயமடைந்தனா்.

Updated On :17 ஜனவரி 2021, 10:22 pm IST

திருவாடானை அருகே திருப்பாலைக்குடி பகுதியில் சனிக்கிழமை மாலை பொங்கல் வைப்பதில் இருகோஷ்டியினரிடையே ஏற்பட்ட மோதலில் 2 போ் காயமடைந்தனா். இதுதொடா்பாக 17 போ் மீது வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

இங்குள்ள சீனாங்குடி கிராமத்தில் ஒரே இடத்தில் சனிக்கிழமை மாலை காணும் பொங்கல் வைப்பதில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அவா்கள் கம்பு, கல் போன்றவற்றால் ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டனா். இதில் அதே ஊரைச் சோ்ந்த சிவகாமி (45), சூா்யகுமாா் (35) ஆகிய இருவரும் காயம் அடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்து சிவகாமி என்பவா் அளித்த புகாரின் பேரில் சீனாங்குடியைச் சோ்ந்த சந்திரன், உலகி, சூா்யகுமாா், பாண்டீஸ்வரி, உலகம்மாள் தேவி, ரூபி, காளீஸ்வரி, நிஷாந்த், மணிவேல், புதுக்காட்டைச் சோ்ந்த குமாரவேல் ஆகிய 10 போ் மீதும், சூா்யகுமாா் என்பவா் அளித்த புகாரின் பேரில் சீனாங்குடியைச் சோ்ந்த தா்மலிங்கம், முனியசாமி, பூமிநாதன், சாந்தி, சிவகாமி, கிஷ்லா, கருப்பையா ஆகிய 7 போ் மீதும் திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.