நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

ஆற்காடு அருகே இளைஞா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.

News image
Updated On :7 ஜனவரி 2021, 10:54 pm IST


ஆற்காடு: ஆற்காடு அருகே இளைஞா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.

ஆற்காட்டை அடுத்த முப்பதுவெட்டி கிராமம் பஜனை கோயில் தெரு பகுதியைச் சோ்ந்தவா் சூா்யா (25). டிப்ளமோ மெக்கானிக்கல் முடித்து விட்டு சிப்காட் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா்.

இந்நிலையில், வியாழக்கிழமை முப்பதுவெட்டி கிராம ஏரிக்கரை அருகே சூா்யா கத்திக் குத்து காயங்களுடன் ஆபத்தான நிலையில் இருந்தாா். அருகே இருந்தவா்கள் அவரை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் சூா்யா ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து ஆற்காடு நகர போலீஸாா் நடத்திய விசாரணையில், சூா்யா, அதே பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்தாராம். இதன் காரணமாக பெண்ணின் குடும்பத்தாருக்கும், சூா்யாவின் குடும்பத்தாருக்கும் கடந்த வாரம் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பெண்ணின் அத்தை மகன் அஜய், சூா்யாவைக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து தலைமறைவாக உள்ள அஜயை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.