அநீதியையும், தீமைகளையும் அழித்து, மக்களுக்கு தீராத நோய்களைத் தீர்த்து வைக்கும் மாரியம்மன் சமயபுரத்தில் அற்புத அம்மனாக காட்சித் தந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.
அம்பாள் வழிபாட்டில் முதன்மை பெற்று விளங்கும் இத்திருக்கோயில், காவியின் வடகரையில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
மகாவிஷ்ணுவின் தசாவதாரத்தில் கிருஷ்ணர் அவதாரம் முக்கிய இடத்தை வகிக்கிறது. இந்த அவதாரத்தில் தேவகியின் குழந்தையாக கிருஷ்ணனும், யசோதையின் குழந்தையாக மாயாதேவியும் அவதக்கின்றனர். அவ்விரு குழந்தைகளும் இறைவனின் எண்ணணத்தால் இடமாற்றம் செய்யப்படுகின்றனர். இதனை கம்சன் அறிந்து கொண்டாலும் குழந்தைகள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதை அறிய இயலாதவனாகிறான்.
குழந்தையைக் கொல்லத் துணிந்த கம்சன், தேவகியின் அறைக்குச் சென்று குழந்தையைத் தூக்க முற்படுகின்றான். ஆனால், அருகில் நெருங்க முடியாதபடி அக்குழந்தை தன் உண்மையான அவதாரத்தை காட்டி நின்றது. அன்னையின் அற்புதத் தோற்றத்தைக் கண்ட கம்சன் பின் சம்ஹாரம் செய்யப்பட்டான்.
மகா சக்தியாக தோன்றிய அம்பாள், தனது எட்டுக் கரங்களிலும் எண்ணணற்ற ஆயுதங்களைத் தாங்கி இவ்வுலகைக் காக்க அவதத்து நின்றாள், இத்தேவியே மகாமா என்னும் மாயம்மனாக கண்கண்ட தெய்வமாக மக்களால் பூஜிக்கப்படுகிறாள்.
விஜயநகர நாயக்க மன்னர்களால் தன் இஷ்ட தெய்வமாகக் கருதப்பட்ட அம்பாள் மாயம்மனின் உத்சவ திருமேனி மிகச் சிறப்பாக வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.
விஜயநகரப் பேரரசின் வலிமை குன்றிய போது, பகைவன் அத்துமீறிய தாக்குதலால் அம்பாளின் பல்லக்கை மாற்று இடத்திற்கும் தூக்கிச் சென்றுள்ளனர். அம்பாளின் செப்புத் திருமேனியோடு வந்த அவர்கள், அன்னையின் பல்லக்கை ஓய்வெடுப்பதற்காக ஒரு இடத்தில் இறக்கி வைத்தனர். அவ்வாறு இறக்கி வைக்கப்பட்ட இடமே சமயபுரமாகும்.
ஓய்வை முடித்துக் கொண்ட இவர்கள் மீண்டும் பல்லக்கை தூக்க முற்பட்டபோது, அம்பாளின் திருமேனியை அசைக்கக் கூட இயலாத பல்லக்கைத் தூக்குவோர் அம்பாளை வணங்கி அங்கியே விட்டுவிடுகின்றனர்.
மக்களால் பெதும் விரும்பி வழிபடப்பட்ட அம்மனுக்கு விஜயரங்க சொக்கநாத நாயக்கர் கண்ணனூல் தனிக் கோயிலை அமைத்து பிரதிஷ்டை செய்தார் என்ற மற்றொரு செய்தியும் கூறப்படுகிறது. இதனை ஒட்டியே சாய்ந்தாள் சமயபுரம், சாதித்தாள் சமயபுரத்தாள் என்ற பழமொழி இன்றளவும் நிலவி வருகிறது.
மேலும், மற்றொரு கூற்றாக ஷ்ரீரங்கம் அரங்கநாதர் திருத்தலத்தில் இருந்த அம்மனின் திருமேனி உக்கிரம் மிகுந்து இருந்தமையால், அங்கு அப்போது இருந்த ஜீயர் சுவாமிகள் அம்மனின் திருவுருவத்தை மற்றொரு இடத்துக்கு மாற்ற ஏற்பாடு செய்தார்.
அதன்படி பணிவிடைபுவோர் அத்திருவுருவத்தை எடுத்துக் கொண்டு வடக்கு நோக்கி வந்து ஒரு இடத்தில் இறக்கி வைத்துவிட்டு இளைப்பாறினர். அவர்கள் இளைப்பாறிய அந்த இடம் இப்போது இனாம் சமயபுரம் என்ற பெயல் உள்ளது.
அதன் நினைவாகவே இப்போதும் இத்திருக்கோயிலின் திருவிழாவில் எட்டாம் நாளன்று அம்மன் அங்கு சென்று ஓர் இரவு ஓய்வு கொள்வது நடைபெற்று வருகிறது.
இளைப்பாறிய அப்பணிவிடையாளர்கள் அங்கிருந்து தென்மேற்காக வந்து கண்ணனூர் அரண்மனை மேட்டில் அன்னையின் திருவுருவத்தை வைத்துவிட்டுச் சென்று விடுகின்றனர். அவ்வாறு அவர்கள் வைத்த இடத்திலேயே இன்று அன்னை மாயின் திருக்கோயில் அருளாலயமாகத் திகழ்கிறது. மேலும், அன்னை மாரியின் திருவுருவம் கண்ணனூர் மாரியம்மன் என்னும் திருப்பெயர் கொண்டு அருள் வழங்குகிறாள்.
சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் எழுந்த வரலாறு நிகழ்வும் ஒன்றும் இங்கு உண்டு. விஜயநகர மன்னர்கள் வடக்கிலிருந்து தென்நாட்டின் மீது படையெடுத்துள்ளனனர். அவ்வாறு வந்த அவர்கள் கண்ணனூர் நாட்டில் முகாமிட்டுள்ளனர். காட்டினிடையே முகாமிட்டிருந்த அம்மன்னன் அரண்மனை மேட்டில் இருந்த அன்னை மாயை வணங்கி, தென்னாட்டில் தங்கள் படை வெற்றிக் கொண்டு அரசு நிறுவினால் இங்கு இத்திருக்கோயில் அமைத்து அன்னையை வழிப்படுவதாக வேண்டினான்.
அம்பாளின் திருவருளால் வெற்றி பெற்று அரசு அமைத்த அம்மன்னன், தாங்கள் செய்து கொண்ட வேண்டுதல் படியே திருக்கோயில் எழுப்பி, அன்பவாரத் தெய்வங்களாக அருள்மிகு விநாயகரையும், அருள்மிகு கருப்பண்ண சுவாமியையும் பிரதிஷ்டை செய்து அம்மனுக்கு குடமுழுக்குப் பெருவிழா நடத்தியோடு, நித்திய பூஜைகளுக்கான ஏற்பாடுகளையும் செய்துவிட்டுச் சென்றுள்ளார். அந்த இடம்தான் சமயபுரம் என்று கூறப்படுகிறது.
திருத்தலத்தின் சிறப்பு:திருக்கடையூல் மார்க்கண்டேயனின் அதீத பக்திக்கு மயங்கி கால சம்ஹார மூர்த்தியாக அவதத்து எமதர்மனை சிவன் அழிக்கவே, உலகில் ஜனன மரண நிலையில் பெதும் மாற்றம் ஏற்பட்டது. அந்த நிலையில், எமதர்மனன் சபையில் மூத்த அமைச்சராகவும், நோய்களின் அதிபதியாகவும் இருந்த மாயாசூரன் பூவுலகில் இறப்பு நின்றுவிட்ட நிலையில், நோய்களைப் பரப்பி மக்களைத் துன்புறுத்தினான்.
அதர்மம் அழிந்து தர்மம் தழைத்தோங்க மும்மூர்த்திகளின் வேண்டுகோளுக்கிணங்க மாயாசூரனையும், அவனது சகோதரர்களையும் வதம் செய்து, அவர்கள் தலையை ஒட்டியாணமாக அணிந்து நோய்களின் கொடுமைகளிலிருந்து மக்களைக் காப்பாற்றிய சிறப்புமிக்கது இத்திருத்தலம்.
இன்றும் கருவறையில் உள்ள அம்பாளின் வலது பொற்கமலத் திருப்பாதம் மாயாசூரனின் தலைமீது எழுந்தருளியிருப்பதைக் காணலாம்.
இன்றும் இத்திருக்கோயில் தீராத நோய்களைத் தீர்க்கும் சிறந்த வழிபாட்டுத் தலமாக விளங்கி வருகிறது.
கோயிலின் அமைப்பு: ஆகம, சிற்ப, வாஸ்து சாஸ்திரங்களுக்கேற்ப அருள்மிகு மாயம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இது செழிப்பையும், வளர்த்தையும் உணர்த்துவதாகக் கூறுவர். கோயில் முகப்பில் உள்ள நீண்ட பெருமண்டபம் பார்வதி கல்யாண மண்டபம் என்றழைக்கப்படுகிறது.
மூன்று திருச்சுற்றுகளைக் கொண்ட இத்திருக்கோயிலின் கிழக்கே உள்ள சன்னதித் தெருவில் அருள்மிகு விநாயகர் திருக்கோயிலும், தெற்கே அருள்மிகு முருகன் திருக்கோயிலும் அமைந்துள்ளன. தேரோடும் வீதியின் வடக்கே மீண்டும் ஒரு விநாயகர் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. மேற்கில் அருள்மிகு ராஜகோபால சுவாமியை பிரதிஷ்டை செய்திருப்பது மற்றொரு சிறப்பாகும்.
திருக்கோயிலின் இரண்டாம் திருச்சுற்றை அடைந்தால் அருள்மிகு விநாயகர் சன்னதியைக் காணலாம். அதைத் தொடர்ந்து, கோயிலின் விருட்சமான வேம்பு மரம், பௌர்ணமி மண்டபம், மாதப் பிறப்பு மண்டபம், நவராத்தி மண்டபம், வாகன அறைகள், வசந்த மண்டபம், அபிஷேக அம்மன் சன்னதி, யாகசாலை மற்றும் தங்கரத மண்டபம் ஆகிய இத்திருச்சுற்றில் அடங்கியுள்ளன.
இரண்டாம் திருச்சுற்று முடிவடைந்த பின்னர் உள்ளே சென்றால் கொடிமரம், பலிபீடம் ஆகியவற்றையும், அதனைத் தொடர்ந்து மாவிளக்கு மண்டபத்தையும் காணலாம்.
கருவறைக்குச் செல்லும் வாயிலின் இருபுறமும் துவாரசக்திகளின் சுதை உருவத்தைக் காணலாம். வலதுபுறம் அருள்மிகு கருப்பண்ணசுவாமியின் சன்னதி உள்ளது.
கருவறைக்கும், மாவிளக்கு மண்டபத்துக்கும் இடைப்பட்ட பகுதிகள் மகா மண்டபம் மற்றும் அர்த்த மண்டபம் என்றழைக்கப்படுகின்றன.
கருவறையைச் சுற்றி பிரகாரம் காணப்படுகிறது. இப்பிரகாரத்தில் விமானத்தின் அதிஷ்டான பகுதியில் தொட்டி போன்று அமைக்கப்பட்டு அதில் நீர் நிரப்பப்பட்டுள்ளது. அம்பாள் கருவறையில் குளிர்ச்சியாக இருப்பதற்காக, உக்கிரத்தைத் தவிர்ப்பதற்காக இத்தகைய முறை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
கருவறையின் இடதுபுறம் உத்சவ அம்பாளின் சன்னதி உள்ளது. இத்திருமேனிக்கு நாள்தோறும் சிறப்பாக அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது. சமயபுரம் அருகிலுள்ள அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயிலுக்குய திருமேனிக்கும் இங்கு நாள் தோறும் அபிஷேகம் செய்யப்படுகிறது.
உத்சவ அம்பாளுக்கு தினமும் 6 கால பூஜை மற்றும் அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. காலை 7.30 மணி மறறும் மாலை 5.30 மணிக்கு செய்யப்படும் அபிஷேக தீர்த்தம் வடக்குப் பிரகாரத்தில் பக்தர்கள் மீது தெளிக்கப்படுகிறது. இதனால் அம்மை நோய் கண்டவர்கள் மற்றும் உடல்நலக் குறைவு உள்ளவர்கள் நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டு விரைவில் நலம் பெறுகின்றனர்.
தல விருட்சம்: இத்திருக்கோயிலின் தல விருட்சமாக விளங்கி வருவது வேம்பாகும். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் இம்மரம், தற்போது திருக்காப்பு விண்ணப்பச் சீட்டை விண்ணப்பிக்கும் முதன்மை இடமாகத் திகழ்கிறது.
அம்பாளுக்கு திருப்பூஜைகள் நடைபெறும் போது தல விருட்சத்திற்கும் பூஜைகள் நிகழ்த்துவது இன்றளவும் வழக்கமாக ஒன்றாக நிகழ்ந்து வருகிறது.
மூர்த்தி: அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் கருவறையில் அம்பாள் வீற்றிருப்பதாக வழக்கமானதாக இருப்பினும், மற்றக் கோயில்களை விட இங்கு மாறுபட்ட வடிவம் கொண்டு அன்னை அருளாட்சி வழங்குகிறாள்.
மூலவன் திருவுருவம் மரத்தால் ஆனதென்றாலும் அதன்மேல் சுதை வேலைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பது புதுமையான ஒன்றாகும்.
தங்கஜடா மகுடத்துடன் குங்கும மேனி நிறத்தில் நெற்றியில் அழகிய வைரப்பட்டைகள் மின்ன கண்களில் அருளொளி வீச வைரக் கம்மல்களுடன் மூக்குத்தியும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் மாரியம்மன்.
ஆதிசக்தியான அம்மன் தனது எட்டுக் கைகளில் இடப்புறமாக கபாலம், மணி, வில், பாசம், வலப்புறமாக கத்தி, சூலம், அம்பு மற்றும் உடுக்கை ஆகிய ஆயுதங்களைத் தாங்கியுள்ளாள்.
இடதுகாலை மடக்கி வைத்து வலது காலை தொங்கவிட்ட நிலையில் சுகாசனத்தில் அமர்ந்து பக்தர்களின் குறைகளை நீக்கி அருள் வழங்கிக் கொண்டுள்ளார் மாரியம்மன்.
தீர்த்தங்கள்: இக்கோயிலில் உள்ள தீர்த்தங்கள் மகாச் சிறப்பு பெற்றவையாகும். பெருவளை வாய்க்கால் புனித சக்தி தீர்த்தம் என்றழைக்கப்படுகிறது.
திருக்கோயிலின் வடமேற்கே திருச்சி} சென்னை நெடுஞ்சாலையில் சமயபுரத்திற்கு இடப்புறம் மகமாயி தீர்த்தமும், திருக்கோயிலின் வடமேற்கேயுள்ள வாயு மூலையில் சர்வேசுவரன் தீர்த்தமும், அருள்மிகு மாயம்மன் திருக்கோயிலின் உபகோயிலான ஷ்ரீஆனந்தவள்ளி உடனுறை ஷ்ரீபோஜீசுவரர் திருக்கோயிலில் அக்னி தீர்த்தமும், அருள்மிகு கனகாம்பிகை உடனுறை ஷ்ரீமுக்தீசுவரர் திருக்கோயிலின் தெற்குப் பகுதியிலும், அருள்மிகு மாயம்மன் திருக்கோயிலின் தென்கிழக்குப் பகுதியில் ஜடாயு தீர்த்தமும் அமைந்துள்ளது.
மேலும், இத்திருக்கோயிலின் மற்றொரு உபகோயிலான அருள்மிகு உஜ்ஜயினி ஓம் காளியம்மன் திருக்கோயிலின் கிழக்குப் பகுதியில் அமைந்திருப்பது கங்கைத் தீர்த்தமாகும்.
திருவிழாக்கள்: தைப்பூசத் திருவிழா, பூச்சொதல், சித்திரை பெருந்திருவிழா, புரட்டாசியில் நவராத்தி பெருவிழா ஆகியவை முக்கியமான திருவிழாக்கள் ஆகும்.
தை மாதத்தில் 11 நாள்கள் தைப்பூசத் திருவிழா நடைபெறுகிறது. பத்தாம் திருநாளில் ஷ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலிலிருந்து மாயம்மன் சீர் பெறுதல் வைபவம் நடைபெறுகிறது.
மாசி மாதத்தில் கடைசி ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்குப் பூச்சொதல் நடைபெறுகிறது.
கிசாசுரனை வதம் செய்த பாவம் தீரவும், தன் கோபம் அடங்கவும் தவம் செய்துஉண்ணாநோன்பிருந்து சாந்த சொரூபியாய் மாரியம்மன் என்று பெயர்கொண்டு மக்களுக்கு அருள்பாலிக்கிறார்.
பங்குனி கடைசி ஞாயிற்றுக்கிழமையில் சித்திரைத் தேர்த் திருவிழாவுக்கான கொடியேற்றமும், சித்திரை முதல் செவ்வாய்க்கிழமை சித்திரைப் பெருந்திருவிழாவும் நடைபெறுகிறது.
வைகாசி மாதத்தில் 15 நாள்கள் பஞ்சப் பிரகாரத் திருவிழா நடைபெறுகிறது. ஆடி மாதத்தில் ஆடிப்பூரத் திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அம்பாள் தீர்த்தவாக் கண்டருளி, இரவு ஷப வாகனத்தில் காட்சியளித்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
ஆவணி மாதத்தில் நான்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் யானை, தங்க சிம்மம், காமதேனு, ஷபம் ஆகிய வாகனங்களில் அம்மன் திருவீதி உலா வருதல் நடைபெறுகிறது.
புரட்டாசியில் நவராத்தி உத்சவம், ஐப்பசியில் மகாளய அமாவாசை, கார்த்திகை மாதத்தில் தீபத் திருவிழா, மார்கழி மாதத்தில் திருவாதிரை பெருவிழா ஆகியவை நடைபெறுகிறது.
பூஜைக் காலங்கள்: காலை 6 மணிக்கு உஷக் கால பூஜையும், காலை 8 மணிக்கு கால சந்தி, பிற்பகல் 12 மணிக்கு உச்சிக் காலம், மாலை 6 மணிக்கு சாய ரட்சை, இரவு 8 மணிக்கு இரண்டாம் காலம், இரவு 9 மணிக்கு அர்த்த ஜமா பூஜையும் நடைபெறுகிறது. அதிகாலை 5.30 மணி முதல் இரவு 9 மணிவரை கோயில் நடை திறந்திருக்கும். திருவிழாக் காலங்களில் மாறுதலுக்குள்பட்டு இருக்கும்.
கட்டணங்கள்: அர்ச்சனை சீட்டு குங்குமம் உள்பட - ரூ. 3, பிரார்த்தனை திருமுகச் சீட்டு} ரூ. 5, நீர் நிரப்புக் கட்டணம் ரூ. 10, காது குத்துச் சீட்டு - ரூ. 10, வஸ்திர காணிக்கைச் சீட்டு - ரூ. 10, பாத்திரங்கள் உபய பொருள்கள் வகையறா காணிக்கைச் சீட்டு } ரூ. 10, கால்நடை காணிக்கைச் சீட்டு - ரூ. 10, கட்டணத் தசனச் சீட்டு - ரூ. 10, முடிகாணிக்கைச் சீட்டு ரூ. 10, சிறப்பு தசனச் சீட்டு - சாதாரண நாள்களில் ரூ. 25, விசேஷ நாள்களில் ரூ. 50, உபயதாரர் மயாதை ரூ. 100, புதுக் கணக்குச் சீட்டு - 100, பாதகாணிக்கைச் சீட்டு - ரூ. 100, மாதாந்திர அர்ச்சனைச் சீட்டு (ஒரு ஆண்டுக்கு) - ரூ. 150, தங்கக்கவசம் சாத்துப்படி சீட்டு - ரூ. 250, அபிஷேக கட்டணம் (ஒரு காலம்) } ரூ. 400, தங்கரதப் புறப்பாடு கட்டணம் ரூ. 1500, அன்னதானக் கட்டணம் 100 பேருக்கு - ரூ. 1500.
காலபூஜை மற்றும் இதர கட்டளைகள், கட்டணங்கள்: முதல் காலம் முதல் ஆறாவது காலப் பூஜை வரை ஒவ்வொரு காலத்துக்கும் ரூ. 5000 கட்டணம் செலுத்த வேண்டும்.
தங்கரத கட்டளை ஒரு சேவைக்கு ரூ. 25,000, அன்னதானம் நாள் ஒன்றுக்கு (100 நபர்களுக்கு கட்டளை)} ரூ. 25,000, மாதாந்திர அர்ச்சனை கட்டளை ரூ. 2,000, தங்கக்கவசம் சாத்துப்படி (ஒரு ஆண்டுக்கு) ரூ. 3,000, உச்சிக்கால தயிர்சாத பிரசாத விநியோகக் கட்டளை ரூ. 5,000, லட்டு பிரசாத விநியோக் கட்டளை (1000 லட்டுகள்) } ரூ. 50,000, சாயரட்சை சுண்டல் விநியோகக் கட்டளை ரூ. 2000, வசந்த மண்டபத்தில் அம்பாளை இறக்கி அபிஷேகம் செய்ய கட்டணம் ரூ. 10,000, கட்டளை (ஆயுள்காலம்) } ரூ. ஒரு லட்சம், தசனக் கட்டளை }(ரூ. 10 வழியில் செல்ல) } ரூ. 5,000, ரூ. 25 வழியில் செல்ல ரூ, 10,000, நிரந்தர தசனக் கட்டளை ரூ. ஒரு லட்சம், சன்னதி நெய்தீப கட்டளை நாள் ஒன்றுக்கு ரூ, 2,000, ஆண்டு ஒன்றுக்கு ரூ. 75,000, திருக்கோயில் மின் விளக்கு நாள் ஒன்றுக்கு கட்டளை ரூ. 75,000, அன்பு இல்ல மாணவர்கள் அன்னதானக் கட்டளை ரூ. 15,000, வேளை ஒன்றுக்கு ரூ. 1,500, மூலவர் சூலசூர்ணம் அதிகாலை நெய்வேத்திய கட்டளை ரூ. 10,000, வேளை ஒன்றுக்கு ரூ. 1500.
கட்டளையில் பங்கு பெற விரும்புவோர் இணை ஆணையர், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம், திருச்சி மாவட்டம்} 621112 என்ற முகவரியிலோ, symmariamman@sancharnet.in என்ற மின் அஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். மேலும், விவரங்கள் தேவைப்படுவோர் http://www.samayapurammariamman.org/ வலைத்தளத்தில் சென்று பார்க்கலாம்.
திருக்கோயில் அலுவலகத் தொலைபேசி எண்கள் -0431-2460670, 2670557, உள்துறை அலுவலகம் - 0431}2670907.
பேருந்து வசதிகள்: திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சமயபுரம் கோயிலுக்குத் தொடர்ந்து பேருந்து வசதிகள் உள்ளன. திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாகச் செல்லும் புறநகர்ப் பேருந்துகளும் சமயபுரத்தில் நின்று செல்லும்.
சத்திரம் பேருந்து நிலையம், டோல்கேட், திருவானைக்கா போன்ற இடங்களிலிருந்து ஆட்டோ வசதியும் உண்டு. சமயபுரத்தில் பல்வேறு தங்கும் விடுதிகள் உள்ளன. ஒவ்வொரு விடுதியும் குறைந்தது ரூ. 200க்கு மேல் கட்டணம் வசூல் செய்கின்றன.
இக்கோயிலுக்கு அருகில் திருவானைக்கா அருள்மிகு அகிலாண்டேசுவ திருக்கோயில், ஷ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயில், மலைக்கோட்டை தாயுமானசுவாமி திருக்கோயில், உறையூர் வெக்காளியம்மன் திருக்கோயில், திருப்பட்டூர் பிரம்மபுரீசுவரர், உத்தமர் கோயில், திருவெள்ளறை ஷ்ரீபுண்டரீகாக்க்ஷப் பெருமாள் திருக்கோயில், திருப்பைஞ்ஞீலி அருள்மிகு ஞீலிவனேசுவரர் திருக்கோயில் போன்ற கோயில்கள் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மெரினா கடற்கரையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: குதிரை ஓட்டி கைது

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!

சொதப்பிய டாப் ஆர்டர், பந்துவீச்சில் அசத்திய ஆர்சிபி; 2-வது சாம்பியன் பட்டம் யாருக்கு?

கனவு நனவான தருணம்! டிரம்ப் மகள் டிஃபானியின் வைரல் பதிவு!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


