திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ரூ.27 லட்சத்தில் புதிதாக சுப்பிரணியர் தேர் செய்யும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் 27-ஆம் தேதி நடைபெற்றது. இதையொட்டி, நவம்பர் 25-ஆம் தேதி பஞ்ச ரதங்களின் உற்சவம் நடைபெற்றது.
அப்போது, சுப்பிரமணியர் தேரில் 2 முறை விரிசல் ஏற்பட்டதால் தேர் புறப்பாடு காலதாமதமானது.
புதிய தேர் செய்யும் பணி: இந்நிலையில் பழுதடைந்த சுப்பிரமணியர் தேருக்குப் பதிலாக புதிய தேர் செய்ய அருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் திட்டமிட்டது. அதன்படி ரூ.27 லட்சம் மதிப்பில் புதிய தேர் செய்யும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
கோயில் இணை ஆணையர் அ.தி.பரஞ்சோதி தலைமையில் பழுதடைந்த தேரைப் பிரித்து புதிதாக தேர் செய்வதற்கான ஆரம்ப கட்ட பூஜை ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
இதற்காக பழுதடைந்த தேரை இழுத்து வந்து அருணாசலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் எதிரே நிறுத்தப்பட்டது. தொடர்ந்து கோயில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பூஜைகள் நடத்தப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இறுதிச் சுற்றுக்கு முன்னேறப்போவது யார்?: ஆர்சிபி vs குஜராத் | குவாலிஃபையர் 1 Preview |

பத்ம ஸ்ரீ பெற்றுக்கொண்ட எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி! - முழுப் பட்டியல்

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன் செய்த கே.எல்.ராகுல்!







