குதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் இன்று வைகாசி அவதாரத் திருவிழா

தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி அருள்மிகு ஆதிநாதர் திருக்கோயிலில் வைகாசி அவதாரத் திருவிழா திங்கள்கிழமை (மே 13) தொடங்குகிறது.

News image
Updated On :13 மே 2013, 5:48 am IST

தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி அருள்மிகு ஆதிநாதர் திருக்கோயிலில் வைகாசி அவதாரத் திருவிழா திங்கள்கிழமை (மே 13) தொடங்குகிறது. இந்த மாதம் 15-ஆம் தேதி கொடியேற்றமும், 23-ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறுகின்றன.

நவத்திருப்பதி கோயில்களில் ஒன்றான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் வைகாசி அவதாரத் திருவிழாவை முன்னிட்டு திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு அங்குரார்ப்பணம் நடைபெறுகிறது.

மே 15-ஆம் தேதி காலை 9 மணிக்கு கொடியேற்றமும், இரவில் இந்திர விமான வாகனத்தில் நம்மாழ்வார் வீதி உலாவும் நடைபெறுகின்றன. திருவிழா நாள்களில் தினமும் காலை 9 மணிக்கு வீதி புறப்பாடும், இரவு 9 மணிக்கு பல்வேறு வாகனங்களில் சுவாமி நம்மாழ்வார் வீதி உலாவும் நடைபெறுகின்றன. மே 23-ஆம் தேதி வியாழக்கிழமை 9-ம் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.