நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

சிதம்பரத்தில் ஏப்.14-ல் வள்ளலார் முத்திரை மாநாடு!

சிதம்பரத்தில் வள்ளலார் கொள்கை பரப்பு மன்றம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சன்மார்க்க சங்கங்களின் சார்பில் வருகிற ஏப்.14-ம் தேதி வள்ளலார் முத்திரை மாநாடு நடைபெறுகிறது.

News image
Updated On :10 ஏப்ரல் 2014, 10:36 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரத்தில் வள்ளலார் கொள்கை பரப்பு மன்றம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சன்மார்க்க சங்கங்களின் சார்பில் வருகிற ஏப்.14-ம் தேதி வள்ளலார் முத்திரை மாநாடு நடைபெறுகிறது.

சிதம்பரம் கீழவீதி வி.கோதண்டராமன் திருமணம மண்டபத்தில் மாநாடு ஏப்.14-ம் தேதி திங்கள்கிழமை நடைபெறுகிறது. மாநாட்டில் சத்தியஞான தீபம் ஏற்றுதல், ஜோதிவழிபாடு, அருட்பெருஞ்ஜோதி தியானப்பயிற்சி, அருட்பெருஞ்ஜோதி அகவல் ஓதுதல், சமரச சுத்த சன்மார்க்க கொடி ஏற்றுதல், சுத்த சன்மார்க்க பேரூரை, சிறப்புரை வள்ளலார் திருவுருவப் வரைபடம் திறப்பு, அருட்பா பாடல், அருட்பா வில்லிசை, அருட்பா பாடல்கள் சிடி வெளியீடு, அருட்பிரகாச வள்ளலாரின் புகழ்பாடும் கவிதை சிடி வெளியீடு ஆகிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன. மேலும் அனைத்து சன்மார்க்க சாதனையாளர்களுக்கு விருது வழங்குதல் நிகழ்ச்சியும், 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

மாநாட்டிற்கு டி.ராஜமாரியப்பன் தலைமை வகிக்கிறார். ஞானாலய வள்ளலார் கோட்டம் ஜி.ஆனந்தன் வரவேற்கிறார். கோவை ஞானகுரு காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள், நற்கருங்குழி ஊராட்சி மன்றத் தலைவர் முத்துக்குமரன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். வடலூர் ஒபிஆர் கல்வி நிறுவனங்களின் செயலாளர் ரா.செல்வராஜ் மாநாட்டினை தொடங்கி வைக்கிறார்.

சிதம்பரம் சுத்த சன்மார்க்க மெய்ப்பொருள் ஆய்வு மைய புலவர் கோ.சீராமன் மாநாட்டு பேரூரையாற்றுகிறார். மாநாட்டில் பேராசிரியர் என்.தில்லைநாயகம், மதுரை ராம.பாண்டுரங்கம், மேட்டுக்குப்பம் புலவர் கே.ஞானதுரை, படப்பை பாலகிருஷ்ணன், திருநள்ளார் புலவர் த.தங்கராசன், வை.நமச்சிவாயம், வடக்குமேலூர் ராம.கோதண்டபாணி, சென்னை சாதுஜெகன், புதுவை த.சக்திவேல், வடலூர் புஷ்ப.செளரிராஜன், ஆன்மீக சொற்பொழிலாளர் ஐ.ரவிச்சந்திரன், செல்வி எம்.மகாலட்சுமி ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். ஜோஜி.பிரசாத் நன்றி கூறுகிறார். மாநாட்டு ஏற்பாடுகளை வள்ளலார் கொள்கை பரப்பு மன்றத் தலைவர் க.கண்ணதாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்துள்ளனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.