எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

தேரோட்டத்தில் ஸ்ரீஆண்டாள் சூடிக்கொள்ள கள்ளழகர் பரிவட்டம் ஸ்ரீவிலி. வந்தது

ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோவில் தேரோட்டத்தில் தேரில் வீற்றிருக்கும் ஸ்ரீஆண்டாள் சூடிக்கொள்வதற்காக, மதுரை கள்ளழர் சூடிக்களைந்த பரிவட்டம்

News image
Updated On :29 ஜூலை 2014, 7:45 pm IST

ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோவில் தேரோட்டத்தில் தேரில் வீற்றிருக்கும் ஸ்ரீஆண்டாள் சூடிக்கொள்வதற்காக, மதுரை கள்ளழர் சூடிக்களைந்த பரிவட்டம் செவ்வாய்கிழமை இரவு ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தது. இதனை கோயில் மரியாதையுடன் தக்கார் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.

சித்ரா பௌர்ணமிக்கு கள்ளழகர் சூடிக் கொள்வதற்கு ஸ்ரீஆண்டாள் சூடிக்களைந்த மங்களப் பொருட்கள் இங்கிருந்து மதுரை செல்லும். இதற்கு சீதனமாக இருமுறை சித்ரா பௌர்ணமிக்குக்கும், ஆடிப்பூரத்திற்கும் ஸ்ரீஆண்டாளுக்கு கள்ளழகர் சூடிக்களைந்த மாலை பரிவட்டம் வரும்.

ஆடிப்பூரத்தில், கள்ளழகர் சூடிக்களைந்த பரிவட்டத்தை சாற்றிக்கொண்டுதான் ஸ்ரீஆண்டாள் தேரில் வலம் வருவார்.

இதற்காக கள்ளழகர் சூடிக்களைந்த பரிவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலுக்கு வந்தது. இதனை கோயில் தக்கார் கே.ரவிச்சந்திரன், ஸ்தானிகம் ரமேஷ் (எ) ரெங்கராஜன், சுதர்ஸன் பட்டர் ஆகியோர் கோயில் மரியாதையுடன் பெற்றுக் கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.