
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த அருள்மிகு வெயிலுகந்தம்மன் கோயிலில் திங்கட்கிழமையன்று ஆவணித்திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.
இக்கோவிலில் ஆவணித்திருவிழா கடந்த 22-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் நிறைவு நாளான பத்தாம் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது. அதிகாலை 5.55 மணிக்கு கடக லக்னத்தில் அம்மன் தேரில் எழுந்தருளி நான்குரதவீதி வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் திருக்கோவில் இணை ஆணையர் தா.வரதராஜன், அலுவலக கண்காணிப்பாளர் கு.கோமதி, இளநிலை பொறியாளர் சந்தாணகிருஷ்ணன், திருவிழா பணியாளர் கோ.வெங்கடேசன், மணியம் தமிழரசன், சிவா உள்ளிட்ட திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் தேர் இழுத்தனர். இரவு அம்மன் அலங்காரச் சப்பரத்தில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சண்முகவிலாசத்தில் எழுந்தருளி சண்முகருக்கு எதிர்சேவை காட்சியளித்து வீதி உலா வந்து திருக்கோயில் சேர்ந்து திருவிழா நிறைவு பெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





