மார்ச் 8-ல் திருவாரூர் ஸ்கந்தசாய்பாபா கோயில் கும்பாபிஷேகம்

திருவாரூரிலுள்ள ஸ்கந்தசாய்பாபா கோயில் கும்பாஷேகம் மார்ச் 8- ம் தேதி நடைபெறுகிறது.
Updated on
1 min read

திருவாரூரிலுள்ள ஸ்கந்தசாய்பாபா கோயில் கும்பாஷேகம் மார்ச் 8- ம் தேதி நடைபெறுகிறது.

திருவாரூர் கீழசன்னதி தெரு வாசன் நகர் சாய்புரத்தில் ஸ்கந்த சாய்பாபா கோயில் மற்றும் தியான மண்டபம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் மார்ச் 8-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. விழாவையொட்டி வியாழக்கிழமை (மார்ச்.5) காலை 9 மணிக்கு அனுஞ்கை, விக்னேஸ்வர பூஜை மற்றும் கணபதி ஹோமத்துடன் முதல் கால பூஜை தொடங்குகிறது.

மார்ச் 6: காலை 9 மணிக்கு 2-ம் கால பூஜை, மாலை 6 மணிக்கு 3-ம் கால பூஜை, மார்ச் 7: 4-ம் கால பூஜை, மாலை 6 மணிக்கு 5-ம் கால பூஜை நடைபெறுகிறது. மார்ச் 8-ம் தேதி காலை 6 மணிக்கு பொது சங்கல்பம், ஜபம், ஹோமம், நாடி சந்தனம், உபச்சாரங்கள் , பூர்ணாஹூதி, தீபாராதனை, யாத்ரா தானம், காலை 9 மணிக்கு கடம் புறப்பாடு நடை பெறுகிறது.

காலை 9.30 மணிக்கு தியானபீட விமான கும்பாபிஷேகம், காலை 9.45 மணிக்கு ஸ்கந்த சாய்பாபா கோயில் மகா கும்பாபிஷேகம், மகாஆரத்தி நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை ஸ்கந்தசாய் அறக்கட்டளை நிர்வாகிகள் தலைவர் கே. ஆனந்தன், செயலர் கே. கனகசபாதி, துணைத் தலைவர்கள் ஜே. ரவிச்சந்திரன், டி. ரவிகுமார், பொருளர் பி. செல்வகுமார் ஆகியோர் செய்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com