திருவண்ணாமலையில் அப்பர் சுவாமிகளின் சித்திரை சதய குருபூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது.
திருவண்ணாமலை, சன்னதி தெருவில் உள்ள அப்பர் சுவாமிகள் திருமடத்தில் செவ்வாய்க்கிழமை இந்த விழா நடைபெற்றது. இதையொட்டி, காலை 9 மணிக்கு ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் அப்பர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம்-அலங்காரம் நடைபெற்றது.
காலை 11.30 மணிக்கு அப்பர் சுவாமிகள் மடத்தில் அப்பர் சுவாமிகளின் சித்திரை சதய குருபூஜை விழாவும், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மாலை 3.30 மணிக்கு திருநாவுக்கரசு தெரு, வேடியப்பன் கோயில் தெரு, செல்லநேரித் தெரு உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகளில் அப்பர் சுவாமிகளின் வீதியுலா நடைபெற்றது.
இந்த விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். குருபூஜைக்கான ஏற்பாடுகளை அப்பர் சுவாமிகள் திருமடத்தின் நிர்வாகிகள், பக்தர்கள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ!

சரிவிலிருந்து மீண்ட சென்செக்ஸ், நிஃப்டி!
ஓடிடியில் வெளியான மை லார்ட்!

அஸ்ஸாம் ஜாதிய பரிஷத் தலைவர் லுரின்ஜோதி கோகோய் வேட்புமனு தாக்கல்!
வீடியோக்கள்

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 22 முதல் 28 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

