மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன்கோயிலில் 8-ம் தேதி நிறபுத்திரி மஹோத்சவம்

சென்னை மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் 8-ஆம் தேதி நிறபுத்திரி மஹோத்சவம் கொண்டாடப்படுகிறது.

சென்னை: சென்னை மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் 8-ஆம் தேதி நிறபுத்திரி மஹோத்சவம் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் தோறும் சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் நிறபுத்திரி விழாவுக்காக ஒருநாள் நடை திறந்து மூடப்படுவதும் வழக்கம் அது போல் இந்த ஆண்டு 7 ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறந்து 8-ஆம்தேதி இரவு 9 மணிக்கு சபரிமலையில் நடை மூடப்படுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயிலின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும் இக் கோயிலிலும் அங்கு நடைபெறுவதை போன்றே, அறுவடை செய்த நெற்கதிர்களை கோயில் மேல்சாந்தியும், கீழ்சாந்திகளும் தலையில் சுமந்து ஊர்வலமாக வந்து ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் சன்னதியில் வைத்து வழிபடும் இவ்விழா திங்கள்கிழமை காலை 5.45 மணியிலிருந்து 6.15 மணிக்குள் நடைபெறவுள்ளது. வழிப்பாட்டிற்குப் பின் இந்த நெற்கதிர்களை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

தங்கள் இல்லத்தில் பூஜை அறையில் பிரசாதமாக வழங்கப்பட்ட நெற்கதிர்களை வைத்து பக்தர்கள் வழிபடுவது வழக்கம் என்றும், மேலும் தகவல்களுக்கு 044 - 28171197, 2197, 5197 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளுமாறு நிர்வாக அதிகாரி அனிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com