
(ஈஷா யோகா மையம், 3 மார்ச் 2016): ஈஷா யோகா மையத்தில் கொண்டாடப்படும் 'யக்ஷா' , வண்ணமிகு இசை மற்றும் நடன விருந்து படைக்கும் ஒரு கலை விழாவாகும். தொடர்ச்சியாக மூன்று நாட்கள் கலை இரவுகளாக நடைபெறவுள்ள இந்த விழாவில், இந்தியாவின் தலைசிறந்த கலைஞர்கள் தங்கள் நிகழ்ச்சிகளை வழங்க உள்ளனர்.
மார்ச் 4 முதல் 6 வரை மாலையில் நிகழவுள்ள இந்த கலைநிகழ்ச்சியானது மஹாசிவராத்திரிக் கொண்டாட்டத்தின் துவக்கமாக அமைகிறது.
மார்ச் 4 : திருமதி. ரமா வைத்தியநாதன், பரதநாட்டியம்
மார்ச் 5 : மல்லாடி சகோதரர்கள், கர்நாடக குரலிசை
மார்ச் 6 : திரு. அஜோய் சக்ரபோர்த்தி, பாரம்பரிய இந்துஸ்தானி குரலிசை
ஆதியோகி முன்னிலையில் நிகழும் இந்த இசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து 3 நாட்களிலும் லிங்கபைரவி உற்சவ மூர்த்தி ஊர்வலமும் மஹா ஆரத்தியும் நடைபெறும்.
ஒவ்வொரு நாள் மாலை 6.50 மணியளவில் ஆதியோகி முன்பாக துவங்கும் இந்நிகழ்ச்சியை சத்குருவுடன் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கண்டுகளிக்க உள்ளனர். ஒவ்வொரு நாள் கலை நிகழ்ச்சி முடிவிலும் தியானலிங்கத்தின் பரிக்கிரமத்தைச் சுற்றி, லிங்கபைரவி தேவி உற்சவ மூர்த்தியின் ஊர்வலமும் நடைபெற உள்ளது. இந்த ஊர்வலத்தில் தியானலிங்கம் முன் நடைபெறும் ஆரத்தியில் நெருப்பு நடனமாடுவது முக்கிய அம்சமாக இருக்கும். நிகழ்ச்சியை ரசிக்க வரும் அனைவருக்கும் இரவு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.
கலையின் கைவண்ணம் - கைவினைப்பொருட்கள் கண்காட்சி
பல்வேறுபட்ட இயல்பான திறமைகளைக் கொண்ட இந்திய கைவினைக் கலைஞர்களை கொண்டாடும் விதமாக இயற்கையான, கைகளால் செய்யப்பட்ட கிராமிய மற்றும் கைவினைப்பொருட்கள் ஈஷா அறக்கட்டளை வழங்கும் இந்த கைவினைப்பொருட்கள் கண்காட்சியில் இடம்பெறும். நான்காம் வருடமாக நடைபெறும் இக்கண்காட்சி மஹாசிவராத்திரி விழாவின் ஒரு பகுதியாக மார்ச் 4ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து கிராமிய கலைஞர்கள், அரசு அல்லாத தனியார் நிறுவனங்கள் மற்றும் தற்கால கைவினைப்பொருள் கலைஞர்கள் இதில் பங்கேற்று தங்கள் கைவினைப் பொருட்களை கண்காட்சியில் வைக்கின்றனர்.
மஹாசிவராத்திரி
மார்ச் 7ம் தேதி தெய்வீக இரவான மஹாசிவராத்திரி, வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் கொண்டாடப்பட உள்ளது. மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை நடைபெறும் இந்த திருவிழாவில், பிரபல சூஃபி மற்றும் கிராமிய இசைக் கலைஞரான திரு.முக்தியார் அலி அவர்களின் இசை நிகழ்ச்சியும், அகம் குழுவினரின் கர்நாடக ஃப்யூஷன் இசை கச்சேரியும் நடைபெறவுள்ளது.
இத்துடன் சேர்ந்து ஈஷாவின் இசைக் குழுவினரான சவுன்ட்ஸ் ஆப் ஈஷா குழுவினர் தங்கள் இசை நிகழ்ச்சி மூலம் வருவோரை உற்சாகப்படுத்தவுள்ளனர். சத்குருவின் சத்சங்கம், சத்குருவால் வழிநடத்தப்படும் சக்திமிக்க தியானம் எனப் பல ஆன்மீக அம்சங்கள் கொண்டு இந்நிகழ்ச்சி நிகழவிருக்கிறது.
தியானலிங்கத்தில் பஞ்சபூத ஆராதனை மாலை 5.30 மணி முதல் 6.20 மணி வரை நடைபெறும். இதை தொடர்ந்து பிரம்மச்சாரிகளின் மந்திர உச்சாடனையுடன் துவங்க உள்ள மஹாசிவராத்திரி கொண்டாட்டத்தில், சுமார் 7 மணியளவில் சத்குரு மேடையேறுகிறார். நடுநிசி இரவில், மிகவும் சக்திமிக்க மஹாமந்திர உச்சாடனையுடன் தியானத்திற்கான தீட்சையை, மக்களுக்கு சத்குரு வழங்கவிருக்கிறார்.
சத்குருவால் வழங்கப்பட்டுள்ள 'சிவாங்கா' விரத தீட்சையை மேற்கொண்டுள்ள ஆயிரகணக்கானோர் தை மாதப் பௌர்ணமியிலிருந்து மஹாசிவராத்திரி வரை 42 நாட்கள் விரதமிருந்து வெள்ளியங்கிரி மலைக்குப் புனித யாத்திரை மேற்கொள்ளவுள்ளனர். மஹாசிவராத்திரி இரவில் தியானலிங்கத்திற்கு தங்கள் அர்ப்பணைகளைச் செய்துவிட்டு சத்குருவின் சத்சங்கத்தில் கலந்துகொள்ளும் இவர்கள், ஈஷா மஹாசிவராத்திரிக் கொண்டாட்டங்களிலும் கலந்துகொள்வார்கள்.
இந்தக் கொண்டாட்டத்தில் நேரடியாக ஈஷாவிற்கு வந்து பல லட்சம் மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈஷாவில் மஹாசிவராத்திரிக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள வரும் அனைவருக்கும் இரவு முழுக்க மகா அன்னதானமும் வழங்கப்பட உள்ளது. நேரடியாக வர இயலாதவர்களுக்கு ஒரு வாய்ப்பாக, இந்நிகழ்ச்சி முழுவதும் DD பொதிகை, Aasthaa TV, ஆகிய தொலைக்காட்சிகளிலும், நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதால் கோடிக்கணக்கான மக்களைச் சென்றடைய உள்ளது. மேலும் http://anandhaalai.com/ms மற்றும் www.isha.sadhguru.org என்ற இணையதளங்களிலும் நேரடி இணைய ஒளிபரப்பை ஈஷா அறக்கட்டளை ஏற்பாடு செய்திருக்கிறது.
உலகம் முழுவதிலும் இந்த இரவு ஈஷா சார்பாக வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில், மொத்தம் 126 மையங்களில் நடைபெறும் ஈஷா மஹாசிவராத்திரி கொண்டாட்டத்தில் பல லட்சகணக்கானோர் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தந்த மையங்களில் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள உள்ள அனைவருக்கும் இரவு முழுக்க அன்னதானமும் வழங்கப்படவிருக்கிறது.
சத்குருவுடன் இணைந்து, ஈஷா யோகா மையத்தில் மஹாசிவராத்திரியின் அருளையும் மகத்துவத்தையும் உணர்ந்திடுங்கள்.
இருக்கை வசதிகளுக்கு தொ.பே : 83000 83000, 83000 11111
மின்னஞ்சல்: mahashivarathri@ishafoundation.org
இணையதளம்: www.mahashivarathri.org
தொடர்புக்கு : 8903816461, 9442641563
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







