ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

விநாயக சதுர்த்தியன்று சந்திரனைப் பார்த்தால் தோஷம் ஏற்படுமா? 

ஒவ்வொரு மாதத்திலும் சதுர்த்தி திதியானது வளர்பிறை சதுர்த்தி, தேய்பிறை சதுர்த்தி என்று இரண்டு நாட்களில் வரும். அன்றைய தினத்தில் விநாயகரை....

News image
Updated On :24 ஆகஸ்ட் 2017, 11:17 am

ஒவ்வொரு மாதத்திலும் சதுர்த்தி திதியானது வளர்பிறை சதுர்த்தி, தேய்பிறை சதுர்த்தி என்று இரண்டு நாட்களில் வரும். அன்றைய தினத்தில் விநாயகரை வழிபாடு செய்வது மிகவும் சிறப்பான பலன்களை தரும். ஆனால் ஆவணி மாதத்தில் வரும் சதுர்த்தியன்று சந்திரனைப் பார்க்கக்கூடாது என்பது வழக்கத்தில் உள்ளது. அதற்கான காரணம் என்ன என்பது பற்றி பார்ப்போம். 

ஒரு நாள் நாரதர் ஒரு மாம்பழத்தை எடுத்துக் கொண்டு சிவபெருமானை சந்திக்க சென்றார். சிவபெருமானை சந்தித்த நாரதர், தான் கொண்டு சென்ற மாம்பழத்தை சிவபெருமானிடம் கொடுத்தார். நாரதர் கொடுத்த மாம்பழத்தை வாங்கிய சிவபெருமான், அந்த மாம்பழத்தை தம் மகன்கள் இருவரில் யாருக்குக் கொடுப்பது எனப் பிரம்ம தேவனிடம் யோசனை கேட்டார்.

பிரம்மன், இந்த மாம்பழத்தை முருகனுக்கு அளிக்கலாம் என்று சொன்னார். பிரம்ம தேவன் கூறியதைக் கேட்ட விநாயகருக்கு மிகவும் கோபம் வந்தது. பிரம்ம தேவன் அந்த மாம்பழத்தை விநாயகருக்கு கொடுக்க சொல்லாமல், முருகனுக்கு கொடுக்கலாம் என்று கூறியதை, சிவபெருமான் தலையின் மேல் இருந்து பார்த்துக் கொண்டிருந்த சந்திரன், விநாயகரைப் பார்த்து ஏளனமாகச் 
சிரித்தாராம். சந்திரன் தன்னைப் பார்த்து சிரிப்பதைப் பார்த்த விநாயகருக்கு மேலும் கோபம் அதிகமாக வந்தது.

உடனே விநாயகர் கோபமாக, பெரியோர் முன்னிலையில் என்னைச் சிரித்து கேலி செய்த உனது ஒளி உலகில் பரவாதிருக்கக் கூடாது எனச் சபித்தார். பிறகு சந்திரன், தான் செய்த தவற்றை மன்னித்து அருள வேண்டும் என்று விநாயகரை வேண்டி நின்றார். சந்திரன் தன் தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்டதால், சாபம் நீங்க ஒரு பரிகாரத்தையும் கூறினார். 

அதாவது, ஆவணி சதுர்த்தியன்று வானில் தெரியும் சந்திரனைப் பார்க்காமல், தன்னை மனமுருகி வழிபடுபவர்கள் என்னுடைய அருளைப் பரிபூரணமாகப் பெற்றுக் கொள்ளலாம் எனக்கூறி அருளினார். அன்று முதல் ஆவணி சதுர்த்தியன்று சந்திரனை பார்க்கக்கூடாது என்ற பழக்கம் உருவானது. அதுவே யாரேனும் தெரியாமல் நாம் விநாயகர் சதுர்த்தி அன்று சந்திரனை பார்த்துவிட்டால், அதற்குப் பரிகார நிவர்த்தியாக சங்கடகர சதுர்த்தி அன்று விநாயகப் பெருமானுக்கு பிடித்த அறுகம்புல்லை அவருக்குத் தந்து வணங்கினால், சந்திரனைப் பார்த்ததால் ஏற்பட்ட தோஷம் விலகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.