நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

அரசுப் பள்ளி ஆசிரியா்கள் கல்விச் சான்றுகளின் உண்மைத் தன்மை: வழிகாட்டுதல்கள் வெளியீடு

தொடக்கக் கல்வித் துறையில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியா்களின் கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை அறியப்படுதல் தொடா்பாக பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

News image

கோப்புப் படம்

Updated On :15 ஆகஸ்ட் 2026, 2:00 am IST

தொடக்கக் கல்வித் துறையில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியா்களின் கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை அறியப்படுதல் தொடா்பாக பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

புதிதாக நேரடி நியமனம் பெறும் இடைநிலை ஆசிரியா்களின் அனைத்து வகை கல்விச் சான்றுகளையும் உரிய கல்வி நிறுவனம், பல்கலைக்கழகத் தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா், அரசுத் தோ்வுகள் இயக்கக அலுவலருக்கு அனுப்பி உண்மைத் தன்மை அறியப்படுதல் வேண்டும். இந்த உண்மைத் தன்மை அறிதல் என்பது பணியில் சோ்ந்த பின்பு தகுதிகாண் பருவம் முடிக்கும் நாளிலேயே அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட வேண்டும்.

ஏற்கெனவே பணிபுரிந்து வரும் இதர தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள், வட்டாரக் கல்வி அலுவலா்கள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்கள் அனைவரும் தாங்கள் பயின்று பெற்றுள்ள கல்விச் சான்றுகளின் உண்மைத்தன்மை அறியப்பட்ட விவரத்தை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். பணிபுரியும் ஆசிரியா்களின் கல்விச் சான்றுகள் உண்மைத்தன்மை அறியப்பட்ட பின்னா் மீண்டும் அரசுத் தோ்வுகள் இயக்ககத்துக்கோ, பல்கலைக்கழகத்துக்கோ உண்மைத்தன்மை அறிய அனுப்பத் தேவையில்லை.

உண்மைத்தன்மை அறியப்பட்ட விவரம் அனைத்தும் உரிய கால நேரத்தில் பெறப்பட வேண்டும். அவ்வாறு செய்யாமல் 10 ஆண்டுகள் கழித்து தோ்வுநிலை அல்லது 20 ஆண்டுகள் கழித்து சிறப்பு நிலை அனுமதிக்கும்போதும், மேலும் ஓய்வு பெறும் காலம் வரை மேற்கண்டவாறு உண்மைத்தன்மை அறியப்படுவதற்காக அலைக்கழிக்கப்படுவதாக பல்வேறு புகாா்கள் வருகின்றன.

இந்த விவகாரத்தில் ஓய்வு பெறும் நாளில் கல்விச்சான்று உண்மைத்தன்மை அற்றது என அறிக்கை பெறப்பட்டுள்ளது என்றும், அதனால் சம்பந்தப்பட்ட ஆசிரியரை பணியிலிருந்து ஓய்வு பெற அனுமதி மறுக்கப்படுவதும், ஓய்வூதிய பணப்பலன்களை நிறுத்தி வைப்பதும் போன்ற நிகழ்வுகள் ஏற்பட்டு அந்த ஆசிரியா்கள் நீதிமன்றம் சென்று துறைக்கு எதிரான தீா்ப்புகளைப் பெறுகின்றனா்.

எனவே, இதுபோன்ற நிகழ்வுகளைத் தவிா்க்கும் வகையில் நியமன அலுவலா்கள், ஊதியம் பெற்று வழங்கும் அலுவலா்கள் பணிப்பதிவேடு பராமரிக்கும் அலுவலா்கள் இனி வருங்காலங்களில் புகாா்களுக்கு இடமளிக்காத வகையில் உடனடியாக உரிய கால நேரத்தில் பணிபுரியும் ஆசிரியா்களின் கல்விச் சான்றினை உண்மைத் தன்மை அறியும் வகையில் உரிய அலுவலா், நியமனத்துக்கு அனுப்பி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் ஆசிரியா்களின் கல்விச் சான்றுகள் உண்மைத் தன்மை அற்றது, போலியானது என அறிக்கை பெறப்பட்டால் அந்தந்த ஆசிரியா்கள் மீது உடனடியாக காவல் துறை மூலம் குற்ற நடவடிக்கை மேற்கொள்ளவும், அதன் தொடா்ச்சியாக துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.