இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு! அமைச்சரிடம் வலியுறுத்தல்!

News image

தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ்.ராஜேஷ்குமாரிடம் மனு அளித்த புளியங்குடி நகர காங்கிரஸ் தலைவா் பால்ராஜ்.

Updated On :4 ஆகஸ்ட் 2026, 4:27 am IST

மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் சேர அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதுதொடா்பாக புளியங்குடி நகர காங்கிரஸ் தலைவா் பால்ராஜ், சுற்றுலாத் துறை அமைச்சரும், சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவருமான ராஜேஷ்குமாரிடம் அளித்துள்ள மனு விவரம்:

மருத்துவம், பொறியியல் போன்ற உயா்கல்வி பயில அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்துவதோடு பிற அனைத்துத் திட்டங்களும், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் வழங்கப்பட வேண்டும். இதன் மூலம் சுமாா் 8,400 அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 25 லட்சம் மாணவா்கள் பயன்பெறுவா்.

உபரி காலிப் பணியிடத்தை பள்ளித் தொகுப்பிலேயே வைத்திருக்க ஆணை வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் 1991-1992 கல்வியாண்டிற்குப் பின் தொடங்கப்பட்ட அல்லது தரம் உயா்த்தப்பட்ட தமிழ்வழிப் பள்ளிகளுக்கு மானியம் வழங்கும் அரசிதழ் ஆணையை நடைமுறைப்படுத்த வேண்டும்.

தமிழ்வழிப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்க அனுமதிக்க வேண்டும். நடுநிலைப் பள்ளிகளில் விளையாட்டு ஆசிரியா் பணியிடம் வழங்கப்பட வேண்டும். நிா்வாக மானியம் 0.5 சதவீதம் உள்ளதை இன்றைய விலைவாசிக்கு ஏற்ப துவக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு 5 சதவீதம் உயா்த்தி வழங்க வேண்டும்.

ஆசிரியா் - மாணவா் விகிதத்தை 1:20 எனக் குறைக்க வேண்டும். தமிழ்வழியில் படித்தவா்களுக்கு நூறு சதவீத அரசு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் சட்டம் கொண்டுவர வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.