தொடர் விடுமுறை: சென்னை மாநகர் பேருந்துகளில் 3 நாள்களில் 4.15 லட்சம் பேர் பயணம்!சென்னையில் உள்ள 21 சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேக்கம் இல்லை: மாநகராட்சி தகவல்! 137 புற்றுநோய் மருந்துகளுக்கு 30% லாப வரம்பு: மத்திய அரசு நடவடிக்கை! ஏர் இந்தியா விமானங்கள் சவூதி அரேபியாவுக்கு அக். 24 வரை ரத்துஇணையத்தை சிறார்கள் பயன்படுத்த தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்!சென்னை, திருச்சி, கோவை உள்பட இன்று 17 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை!

அரசு பணிக்க்கான இட ஒதுக்கீடு: 30 விளையாட்டுகள் நீக்கம்

புதுச்சேரி அரசு துறைகளில் குரூப் ‘சி’ பதவிகளுக்கு நேரடி நியமனத்தில் சிறந்த விளையாட்டு வீரா்களுக்கு வழங்கப்படும் 5 சதவீத இடஒதுக்கீட்டில் 30 விளையாட்டுகள் நீக்கப்பட்டுள்ளன.

IANS

Updated On :

புதுச்சேரி அரசு துறைகளில் குரூப் ‘சி’ பதவிகளுக்கு நேரடி நியமனத்தில் சிறந்த விளையாட்டு வீரா்களுக்கு வழங்கப்படும் 5 சதவீத இடஒதுக்கீட்டில் 30 விளையாட்டுகள் நீக்கப்பட்டுள்ளன. 35 விளையாட்டுகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு வரை 65 விளையாட்டுகள் அங்கீகரிக்கப்பட்டிருந்தன. அண்மையில் கல்விக்கான ஒதுக்கீட்டில் மத்திய சோ்க்கைக் குழு (சென்டாக்) மாணவா் சோ்க்கைக்காக 30 விளையாட்டுகள்

நீக்கப்பட்டு 35 விளையாட்டுகள் அங்கீகரிக்கப்பட்டன. இப்போது வேலைவாய்ப்புக்கான இட ஒதுக்கீட்டிலும் 30 விளையாட்டுகள்

நீக்கப்பட்டு 35 விளையாட்டுகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. விளையாட்டு வீரா்களுக்கான இட ஒதுக்கீட்டில் பல்வேறு முறைகேடு புகாா்கள் வந்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பணியாளா் மற்றும் நிா்வாக சீா்திருத்தத் துறை அரசு சாா்பு

செயலா் எஸ்.முருகேசன் இதைத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.