செல்வம் சேரும் ரகசியங்கள்..!

உலகத்தில் பணத்திற்கு எப்போதும் தனி முக்கியத்துவம் உண்டு. இந்தக் காலத்தில் பணம் பணம் எல்லாம் பணம் தாங்க.....
செல்வம் சேரும் ரகசியங்கள்..!
Updated on
2 min read

உலகத்தில் பணத்திற்கு எப்போதும் தனி முக்கியத்துவம் உண்டு. இந்தக் காலத்தில் பணம் பணம் எல்லாம் பணம் தாங்க. பணம் பத்தும் செய்யும், பணம் பாதாளம் வரைப் பாயும், பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும் எனப் பல பழமொழிகள். பணம் ஒரு மனிதனை பைத்தியகாரனகக் கூட மாற்றுமாம். இப்படி பணத்தின் பெருமையும் குணத்தையும் சொல்லிக்கொண்டே போகலாம்.

பணத்திற்கு அதிபதி யார் என்றால் குபேரர். அவரை வணங்கினால் செல்வம் சேர்ந்து கொண்டே இருக்குமாம். செல்வம் கூட யார் தம்மை போற்றிப் பாதுகாக்கின்றனரோ அவரிடம் தான் மேன்மேலும் பெருகும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

ஜாதகத்தில் யோகங்களை அனுபவிக்கக் கூடிய பல கிரக அமைப்புகள் இருந்தாலும் குபேரனை போல் சகல செல்வங்களையும் பெற்று வாழக்கூடிய கிரக அமைப்புகளும் உள்ளன.

தனுசு, கும்பம், மீனம், கன்னி, ரிஷபம் இவற்றில் ஒன்று லக்னமாகி அதில் சுப கிரகங்கள் இருந்தால் அந்த ஜாதகன் தேவர்களுக்கு அரிதான திறமை பெற்ற யோகமுடையவன் ஆவான். பொன்னும் பொருளும் சேருவதோடு, நாட்டினை பாதுகாத்து ஆட்சி செய்பவராக இருப்பர்.

சரி, இப்போது செல்வம் சேரும் ரகசியத்தைப் பார்ப்போம்.

• பணத்தைப் பிறரிடம் வழங்கும்போது தலைப் பகுதியை நம் பக்கம் வைத்தபடி வழங்கிப் பிரியா விடை தர வேண்டும்.

• வாடகை, பலசரக்கு, பால் எனப் பணத்தைப் பிறருக்கு வழங்கும்போதெல்லாம், சீக்கிரம் வேறு வழியில் என்னிடம் வந்து சேர்! எனப் பிரியா விடை கொடுத்து அனுப்ப வேண்டும்.

• ஈரம், ஈரத்தை ஈர்ப்பது போல், ஏற்கனவே இருக்கும் பணம் தான் புதிய பணத்தை ஈர்த்து வரும். எனவே, நம்மிடம் இருக்கும் பர்ஸ், வங்கி, பீரோ ஆகியவற்றில் வறட்சி எப்போதும் ஏற்படுத்தக் கூடாது.

• இருப்புத் தொகை அதாவது குறிப்பிட்ட தொகை இருக்கும்போதே செலவை நிறுத்தி விட வேண்டும். நாள்தோறும் கண்கள் பணத்தைப் பார்த்துக்கொண்டே இருக்கும் வகையில் பணத்தை பசுமையைப் பராமரிக்கவும்.

• தூய்மையற்ற இடத்திற்குள் திருமகள் நுழைய மாட்டாள். வீடு, அலுவலகம், கல்லாப்பெட்டி, பணப்பை எனச் செல்வம் புழங்க வேண்டிய இடங்களை எப்போதும் தூய்மையாக வைத்துப் பராமரிக்கவும்.

• வணிகத்தை, தொழிலை, அலுவலகப் பணியை மனமலர்ச்சியுடன் செய்யுங்கள். சிரிப்பவர்களைப் பார்த்தே செல்வ லட்சுமி வருகிறாள்.

• குபேர லிங்கம் படத்தைப் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள். பண வருமானம் குறையாது.

• குபேரனின் படத்துடன் லக்ஷமியையும் சேர்த்து குபேர யந்திரத்துடன் 48 நாள் பூஜிக்க செல்வம் செழிக்கும்.

• வெள்ளிக்கிழமைகளில் குபேரனுக்கு உகந்த மலர்கள் மற்றும் காசும் சமர்ப்பித்து 108 குபேர போற்றிகளை சொல்லிக் குடும்பத்துடன் வணங்கி வந்தால் வருமானம் பெருகும்.

• வியாபார ஸ்தலங்களிலும், வீடுகளிலும் இவரை வடக்கு பார்த்த திசையில் வைத்தால் அதிர்ஷ்டம் வீடு தேடி வருமாம்.

• ஓம் யக்ஷாய குபேராய வைஸ்வரவணாய
  தனதான்யாதிபதயே தனதான்ய ஸம்ருத்திம்மே
  தேஹி தாபய ஸ்வாஹா

என்ற ஸ்லோகத்தைத் தினமும் சொல்லிவர குபேர சம்பத்து உண்டாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com