மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

கேதார்நாத்லிருந்து, ராமேஸ்வரம் வரை ஒரே நேர்கோட்டில் அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள்! (விடியோ)

கேதார்நாத் முதல் ராமேஸ்வரம் வரை ஒரே நேர்கோட்டில் 8 சிவாலயங்கள் அமைந்துள்ளது என்பது பிரம்பிக்க வைக்கும் ஒரு விஷயமாகவே உள்ளது. 

News image
Updated On :2 நவம்பர் 2017, 7:20 am

தினமணி

கேதார்நாத் முதல் ராமேஸ்வரம் வரை 8 சிவாலயங்கள் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன என்பது பிரம்மிக்க வைக்கும் ஒரு விஷயமாகவே உள்ளது. இது சிலருக்கு தெரிந்திருக்கலாம். பலருக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால், இது அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய ஓர் அறிவியல் கலந்த ஆன்மிக விஷயமாகும்.

எந்தவொரு அறிவியல் கண்டுபிடிப்புகளும், தொழில்நுட்ப கருவிகளும் இல்லாத பண்டைய காலத்திலேயே சிவனின் பஞ்சபூத ஸ்தலங்கள் என கூறப்படும் ஐந்து கோவில்களும், இந்தியாவில் ஒரே நேர்கோட்டில் கட்டப்பட்டிருக்கின்றன. மிக கச்சிதமாக ஒரே நேர்கோட்டில் அமைந்திருக்கும் இதை எதிர்பாராமல் நடந்த விஷயமாக கருத முடியாது.

கேதார்நாத்லிருந்து, ராமேஸ்வரம் வரை நேர்கோட்டில் கோவில்களை எப்படி அந்த காலத்தில் கட்டினார்கள் என்பது நினைத்துபார்க்க முடியாத ஒன்றாகும். இன்றளவும் இது நீடிக்கும் மர்மமாகவே இருந்து வருகிறது.

நிலம் - காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்

நெருப்பு - திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் 

நீர் - திருவானைக்கா ஜம்புகேசுவரர் கோயில்

ஆகாயம் - சிதம்பரம் நடராசர் கோயில்

காற்று - திருக்காளத்தி காளத்தீசுவரர் கோயில்.

சிவனின் இந்த பஞ்சபூத ஸ்தலங்களும் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோவில்கள் ஆகும். அப்போது, எந்தவொரு அளவீட்டுக் கருவிகளோ அல்லது செயற்கைக்கோள் உதவிகளோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பஞ்சபூத ஸ்தலங்கள் மட்டுமின்றி இமாலயத்தில் இருக்கும் கேதார்நாத்தும் கூட இதே நேர்கோட்டிலான தீர்க்கரேகையில் அமைந்திருப்பது நம்மை வியப்பின் உச்சத்திற்கு கொண்டு செல்கிறது.

கேதார்நாத்திலிருந்து இராமேஸ்வரம் வரை இடைப்பட்ட தொலைவு ஏறத்தாழ 2.383 கி.மீட்டர் ஆகும். இவ்வளவு இடைப்பட்ட தூரத்தில் இடையிடையே அமைந்திருக்கும் இந்த சிவாலயங்கள் ஒரே தீர்க்கரேகையில் அமைந்திருப்பது மர்மமாக தான் இருக்கின்றது. 

Story image

தீர்க்கரேகையில் உள்ள எட்டு பிரசித்தி பெற்ற கோவில்கள்

1) உத்தரகண்ட் கேதார்நாத் - கேதார்நாத் கோயில் (30.7352° N, 79.0669)

2) காலேஷ்வரம் - காலேஷ்வரா முக்தீஷ்வரா சுவாமி கோயில் (18.8110, 79.9067)

3) ஸ்ரீ காலஹஸ்தி - ஸ்ரீ காலஹஸ்தி கோயில் (13.749802, 79.698410)

4) காஞ்சிபுரம் - ஏகாம்பரநாதர் கோயில் (12.847604, 79.699798)

5) திருவானைக்காவல் - ஜம்புகேஸ்வரர் கோயில் (10.853383, 78.705455)

6) திருவண்ணாமலை - அண்ணாமலையார் கோயில் (12.231942, 79.067694)

7) சிதம்பரம் - நடராஜர் கோவிலில் (11.399596, 79.693559)

8) ராமேஸ்வரம் - ராமநாத கோயில் (9.2881, 79.3174).

கேதார்நாத் முதல் காலேஷ்வரம் வரை இடையே இன்னும் பல சிவாலயங்கள் இதே நேர்கோட்டில் தீர்க்கரேகையில் அமைந்திருக்கலாம் என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.